Home > Tamil > உங்கள் பிள்ளைகள் பேச உதவுங்கள்

உங்கள் பிள்ளைகள் பேச உதவுங்கள்

இலங்கையிலுள்ள பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை மற்றப் பிள்ளைகளுடன்  ஒப்பிட்டுப் பேசும் போது மிகுந்த மன வருத்தத்திற்கும் அசௌகரியங்களுக்கும் ஆளாகின்றார்கள்.

  • உங்கள் குழந்தை ஏன் மெலிவாக இருக்கிறது?
  • உங்கள் பிள்ளை ஏன் இன்னும் கதைக்காமல் இருக்கிறது?
  • உங்கள் பிள்ளையின் அழகான சுருண்ட மயிரை வெட்டாதீர்கள்.
  • உங்கள் பிள்ளை இன்னுமா மழலைக் கதை பேசுகிறது?

இதைப்பற்றி நாம் மேலே பேசுவதற்கு முன்னர், ஒவ்வொரு பிள்ளைகளும் தனித்துவமிக்கவர்கள் என்பதை மனதில் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் அதன் வளர்ச்சியின் போதும் அதன் கற்றலின் போதும் அதற்கென்றே ஒரு தனிப் பாணியைக் கொண்டுள்ளது. சமூக விதிமுறைகளைக் கொண்டு உங்கள் குழந்தையை ஒப்பிட்டு அதன் வளர்ச்சியில் வரையறைகளை எப்போதும் இடுதல் கூடாது.

 1-1/2 வயதுள்ள குழந்தைகள் சிற்சில வார்த்தைகளைப் பேசத் தொடங்குவார்கள் (சில குழந்தைகள் பேசுவதற்கு காலம் எடுப்பார்கள்) இத்தகைய காலப்பகுதியில் உங்கள் குழந்தை சிறந்தவகையில் சொற்களைக் கற்றுக் கொள்ளும். அதன் போது உங்களது உதவியும் தூண்டுதலும் அதற்குத் தேவைப்படும். இப்போது ஓயாது கதைத்துக் கொண்டிருக்கும் எனது மகள்மாருக்கு, அப்போது நான் பேசக் கற்றுக்கொடுக்கும் போது பின்பற்றிய சில வழிமுறைகளை உங்களுக்கும் கூறுகிறேன்.

 குழந்தைகள் பேசுவதற்கு உதவுங்கள்

  • பேசுவதற்கு ஆர்வமூடுங்கள் – தொடர்பாடலில் உள்ள சக்தியைப் பற்றி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சாப்பிடும் போது, அவர்கள் விரும்பி உண்ணும் உணவில் சிரிதளவினை மட்டும் அவர்களது பீங்கானில் பரிமாறுங்கள். அவற்றை இன்னும் அதிகமாகக் கேட்கத் தூண்டுங்கள். அவர்கள் கையை காட்டிக் கேட்டாலோ அல்லது சிணுங்கினாலோ அதனை அனுமதிக்காதீர்கள். ‘இன்னும் வேண்டும்’ தாருங்கள்’ ‘தயவு செய்து’ போன்ற வார்த்தைகளைக் கற்றுக் கொடுங்கள்.

டிவி, மற்ற விளையாட்டுப் பொருட்களை எட்டாதவாறு அகற்றி வையுங்கள்.  அவர்களைப்  பேசப் பண்ணுங்கள். அவர்கள் அவற்றைக் காட்டி டிவி, பொம்மை, பந்து என்று கேட்பதற்குத் தூண்டுங்கள்.

  • ஆர்வமுள்ள கதைகளை வாசித்துக் காட்டுங்கள். – உங்கள் குழந்தை சில அடிப்படைச் சொற்க்களை கற்றுக் கொண்டதன் பின்னர் அவர்களை ஆர்வப்படுத்தும் விதமாகவும் கேள்விகளைக் கேட்கும் விதமாகவும் கதைகளை வாசித்துக் காட்டுங்கள். வாசிப்பதை சிறிது நிறுத்தி விட்டு “அந்தக் காகம் என்ன செய்தது?” எனக் கேளுங்கள்.
  • சிறுவர் பாடல்களை பாடுங்கள் – உங்கள் குழந்தைகள் பாடல்களை விரும்பிக் கேட்பார்கள். படுக்கைக்குச் செல்லும் முன்னர் பாடல்களைப் படித்துக் காட்டுங்கள். பாடும்போது இடையில் மறந்து விட்டதாக பாசாங்கு செய்து அவர்கள் அதனை ஞாபகப்படுத்திக் கூறப் பண்ணுங்கள். சிறு பாடல்கள் மற்றும் தாலாட்டுக்கள் பற்றி இங்கு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.
  • இசை வீடியோ பாடல்களை தவழ விடுங்கள்.  இவை அனைத்தும் பிள்ளைகளுக்குப் பொழுதுபோக்காக அமைவதுடன் அவர்களைப் பேசவும் தூண்டும். இவற்றை உங்களது காரிலோ அல்லது வீட்டிலோ போடலாம். அவர்களுடன் சேர்ந்து நீங்களும் பாடுங்கள்.
  • அவர்களுடன் சிறிது பேசுங்கள் – அவர்களை பாடசாலையிலிருந்து அழைத்து வரும்போதும் அல்லது வேறு எங்கும் செல்லும் போதும் அவர்களுடன் பேச்சை ஆரம்பியுங்கள். அவர்களது பாடசாலை, நண்பர்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என்றெல்லாம் கேளுங்கள். அவர்களது பதில் சரியாக அமையாவிட்டால் பரவாயில்லை. ஆனால் அவர்களைக் கதைப்பதற்குத் தூண்டுங்கள். அதனை நன்றாகப் பொறுமையாகக் கேளுங்கள். சிறிய, இலகுவான, அவர்கள் விளங்கிக் கொள்ளக்கூடிய சொற்களை நீங்கள் பயன்படுத்துங்கள். நீங்கள் கூறுவதை அவர்கள் விளங்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு உதவுங்கள். அப்போது அவர்கள் சரியாக விடை கூற அது இலகுவாக இருக்கும்.
  • மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதற்குத் தூண்டுங்கள் – உங்கள் குழந்தைகள் நண்பர்களுடன் பலகுவதற்குத் தூண்டுங்கள். குழந்தைகள் தங்களது உடன் பிறப்புக்களுடனேயே முதலில் பேசத் தொடங்குவார்கள். ஆனால் உங்களது குழந்தை மூத்தவராகவோ அல்லது தனியொருவராகவோ இருந்தால் அவர்களுக்கு மற்றக் குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.
  • மற்றக் குழந்தைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு ஊக்குவியுங்கள் விளையாடுவதற்கான நேரத்தை ஒதுக்கி மைதானத்துக்குச் சென்று மற்றப் பெரிய குழந்தைகளுடன் விளையாட வையுங்கள். அப்போது உங்கள் குழந்தை விரைவாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம். மூத்த சகோதரர்களை உடைய குழந்தைகள் விரைவாக பேசக் கற்றுக் கொள்வார்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு முத்திரை குத்தாதீர்கள். – ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் முந்திப் பிந்தியே பேசத் தொடங்குவார்கள். சிலர் மெதுவாகவே பேசக் கற்றுக் கொள்கிறார்கள். சிலர் 2 வயதிலேயே கற்கத் தொடங்குகிறார்கள். ஆனால் உங்கள் குழந்தை 3 வயதான பின்னரும் சில சொற்களைச் சரியாகப் பேசாவிட்டால் உங்கள் வைத்தியரை நாடுதல் சிறந்தது.

  பேச்சுக் குறைபாடுகள் அல்லது வேறு பிற காரணங்களுக்காக இதனைப் பார்க்கவும்.

உலகம், சமுதாயம் எவ்வளவு அழகானது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் காட்டுங்கள்.  சமூகத் திறன்கள் மற்றும் ஆர்வம் என்பனவற்றின் மூலம் குழந்தைகளது பேச்சுத் திறனை ஊக்கப்படுத்துங்கள்.

சமூகம் சொல்வதை அப்படியே பின்பற்றாதீர்கள். ஆனால் மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலையில் உங்கள் குழந்தைகளது தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்புங்கள்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.