Home > Tamil > வீட்டு வன்முறைகள்

வீட்டு வன்முறைகள்




வீட்டு வன்முறைகளைத் நிறுத்துவோம்.

இல்லம் என்பது அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் மிக்கதொரு இடமாகும். ஆனால் பெண்களுக்கு இடம்பெறும் வன்முறைகளில் 6௦% க்கும் மேற்பட்டவைகள் வீட்டிலேயே இடம்பெறுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இது உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா?

அதாவது, பெண்கள் தமது சொந்த வீடுகளில் நான்கு சுவர்களுக்குள் தமது துணைவரால் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மார்ச் மாதத்தில் நாம் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுகின்றோம். எனவே தாய்மார்கள், இலங்கையிலுள்ள பெண்களுக்கு வீட்டில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக சற்று சிந்திக்க உகந்த தருணம் இதுவென எண்ணுகின்றோம்.

வீட்டு வன்முறைகள் என்றால் என்ன?

வீட்டு வன்முறை என்பது ஒருவர் தமது துணையினால் அல்லது குடும்ப உறுப்பினரால் தமது வீட்டில் வைத்தே உடல் ரீதியாக, உணர்வு ரீதியாக, சொல்லால், பாலியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக துன்புறுத்தப்படுவதை அல்லது அவமானப்படுத்தப்படுவதைக் குறிக்கும். வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை முழுவதும் அச்சத்துடனும், உடல் காயங்களுடனும், உணர்வு ரீதியான தாக்கங்களுடனுமே வாழவேண்டியுள்ளது.

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் யார்?

வீட்டு வன்முறையானது இன, மொழி, கல்வி, சமூக ஏற்றத்தாழ்வுகள், வருமான மட்டங்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி முழு உலகையுமே ஆட்டிப் படைக்கும் ஒரு பாரிய பிரச்சினையாக உருமாறியுள்ளது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள். இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப் படும் குழந்தைகள், உளவியல் ரீதியாக, வாழ்க்கையைக் கண்டு மிகுந்த அச்சம் கொள்கிறார்கள்.

வீட்டு வன்முறைகளைக் கண்டுபிடிப்பதும் அதனை நிறுத்துவதும் ஏன் கடினமான ஒரு காரியமாக உள்ளது?

வீட்டு வன்முறை என்பது மனித உரிமை மீறலாகும். அது தொடர்பாக கட்டாயம் போலீசில் புகார் செய்தல் வேண்டும். ஆனால் இலங்கையில் இது இடம்பெறுவதில்லை. ஏனெனில் பெண்கள் இயல்பாகவே தமது வீட்டு உறுப்பினர்களுக்கு மதிப்பு கொடுப்பதும் தமது கலாச்சாரங்களில் ஊறிப்போய் வீட்டு விடயங்களை வெளியில் சொல்வது அநாகரிகமானது என எண்ணுவதுமே இதற்க்கு காரணமாகும். இதனால் வன்முறை இடம்பெற்றாலும் அவற்றை வெளியில் சொல்ல பயப்படுவதோடு வெட்கப்படுகிறார்கள்.

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றீர்கள் என்பதற்கான அறிகுறிகள்

நீங்கள் உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருந்தால் அல்லது வேண்டுமென்றே உங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தக்களவு வளங்கள் மறுக்கப்பட்டால், அல்லது வாய்ச்சொல்லால் அல்லது உணர்வு ரீதியாக தாக்கப்பட்டால், அல்லது தொடர்ந்தும் நீங்கள் பயத்துடனேயே வாழ்க்கையை நடத்தும் நிலைமைகள் வீட்டு வன்முறைக்கான அறிகுறிகளாகும்.

நீங்கள் தனித்து விடப்படவில்லை

நீங்கள் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே பொருத்தமான இடத்தில் உதவியை நாடுங்கள். நம்பிக்கையான நண்பருக்கு, உறவினருக்கு, மதத் தலைவருக்கு அல்லது உளவள ஆலோசகருக்கு அதனை சொல்லுங்கள். நீங்களோ உங்கள் குழந்தைகளோ உடல் ரீதியாகவோ பாலியல் ரீதியாவோ வீட்டில் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக பாதுகாப்பைத் தேடிச் செல்லுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் உங்களுக்கு உதவ 24 மணித்தியாலங்களும் தயாராக உள்ளது.  Women’s and Children’s Bureau

ஒத்துழைப்பை வழங்குங்கள்

வீட்டு வன்முறைகாளால் பாதிக்கப்பட்ட ஒருவர் உங்களின் உதவியை நாடி நின்றால் அவர்களுக்கு நன்றாகச் செவிசாய்த்து அவர்கள் உதவி பெற ஊக்கமளியுங்கள். உங்கள் அயல் வீட்டில் இத்தகைய வீட்டு வன்முறைகள் இடம்பெற்றால் அதனை கண்டும் காணதவாறு இருக்காது அவர்களுக்கு உதவி செய்ய முன்வாருங்கள். அவ்விடயத்தில் தலையிட்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அல்லது போலிசுக்கு அறிவியுங்கள்.

பிள்ளைகளை அறிவுறுத்துங்கள்

வீட்டு வன்முறைகள் இடம்பெறும்போது பிள்ளைகள் மெளனமாக இருந்துவிடுவார்கள். உங்கள் பிள்ளைகளின் பாடசாலையில் வீட்டு வன்முறைகள் தொடர்பாக பிள்ளைகளை விழிப்படையச் செய்யும் செயலமர்வுகளை ஒழுங்கு செய்யுங்கள். எங்கே உதவிகளைப் பெறலாம் என அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்.

வன்முறையில் ஈடுபட்ட எவரேனும் நபரர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தால் துணிவுடன் அவரை எதிர்கொண்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். அவர்கள் தங்கள் தீய செயல்களை மாற்றி அமைப்பதற்கு ஆலோசனைகள் கூறி ஊக்கப்படுத்துங்கள்.

பிள்ளைகளுக்கு சரியானவற்றைக் கற்றுக் கொடுங்கள்

வீட்டுச் சூழலில் உங்கள் பிள்ளைகளிடையே வன்முறையாக நடந்து கொள்ளாதீர்கள். அவர்களுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுங்கள். பெண்களை மதித்து வாழவும் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடாதவாறும் உங்கள் ஆண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். இத்தகைய மனோபாவங்கள் எதிர்காலத்தில் அவர்கள் பெண்கள் மீது மிகுந்த மதிப்பு வைக்க காரணமாக அமையும்.

வீட்டு வன்முறைகளை நிறுத்துவதற்கு நாம் சிறிதளவேனும் பாடுபடுதல் வேண்டும். வீட்டு வன்முறைகளை எவ்வாறு தடுத்தீர்கள் என்பது தொடர்பில் ஏதேனும் சம்பவங்கள் இருந்தால் mummypages.lk க்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் அனுபவங்கள் இலங்கையிலுள்ள மற்றப் பெண்களையும் உற்சாகப்படுத்தும்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.

error: Content Protected © mummypages.lk