week-6

உங்களது குழந்தை இப்பொழுது சிறிது வளர்ச்சியடைந்திருக்கும். உங்களால் உணர முடியாது விடினும் அதனது இதயம் நன்றாகத் துடிக்கும். உங்களது குழந்தை இப்பொழுதும் உங்களது குருதியின் மூலமாகவே தேவையான ஊட்டத்தினைப் பெறுகிறது. அதனது கைகள், கால்கள், கண்கள் ஆகியன இப்போது உருவாக ஆரம்பிக்கும். கடந்த வாரத்தில் ஏற்பட்டது போன்ற உடல் அசௌகரியங்கள் சிலவற்றை இப்போதும் நீங்கள் அனுபவிக்கக்கூடும். இக்கால கட்டத்தின்போது குறிப்பிட்ட சில உணவுகளில் நீங்கள் விருப்பம் கொள்வது சாதாரண விடயம். ஆயினும் சிலவற்றுக்காக சிறிது விட்டுக்கொடுத்து அனுபவிக்கவும். வாந்தி போன்ற காலைநோய் தொடர்ந்தும் ஏற்படுகின்றதாயின் உங்களால் உண்ணக்கூடியவற்றை சிறிய அளவில் உண்ணவும். அருவருப்பிலிருந்து விடுபடுதற்கு இது உதவும். காலை நோயைப்பற்றி மேலும் அறிவதற்கு இவ்விணைப்பினை நாடவும். இவ்வேளைகளில் இயற்கையான உணவுப் பொருட்களை

உண்பதைக் கைக்கொள்ளுங்கள். வீரியமான வேதிப்பொருட்களைக்கொண்ட தலைமுடி நிறமூட்டிகள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களைத் தவிர்க்கவும். கலவைகள் சேர்க்கப்பட்ட செயற்கை உணவுகளைத் தவிர்ப்பதுடன் மதுபானங்கள் அருந்துவதை நிறுத்தவும். எவ்வகையான உணவுகளை நீங்கள் உட்கொள்ளவேண்டும் என்பதனை இவ்விணைப்பில் காண்பதுடன் கருத்தரித்திருக்கும் வேளையில் மதுபான நுகர்வினைப்பற்றி இங்கு மேலும் அறிந்துகொள்க. பொது சௌக்கிய மாதுவினை நீங்கள் ஏற்கெனவே சந்தித்திருக்கக்கூடும். இல்லையாயின் உடனே அவர்களைச் சந்தித்து மருத்துவக் கிளினிக்குகளுக்கான உங்களது தினங்களை ஒதுக்கிக் கொள்ளவும். உங்களுக்கு உதவுவதற்கு இருக்கக்கூடிய அணியினைரைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள இவ்விணைப்பினை நாடவும்