week-5

உங்களது குழந்தை இப்பொழுது ஏறத்தாள 2 மில்லி மீட்டர் நீளம் கொண்டதாகவிருக்கும். அது சிறியதொரு அவரை விதையளவு பருமன் உடையதாக இருக்கும். அது மிகச்சிறிய அளவுடையதாக இருப்பினும் அதனது இருதயம் துடிக்கத் தொடங்கியிருக்கும். உங்களது குழந்தைக்குத் தேவையான பிராணவாயு மற்றம் ஊட்டச்சத்துக்களை உங்களது இரத்தத்திலிருந்தே பெற்றுக்கொள்கிறது. கருவுற்றிருத்தல் ஒரு நோயல்லவெனினும் உங்களது உடலில் குறிப்பிட்ட மாற்றங்கள் ஏற்படக் காண்பீர்கள். கருவுற்றிருக்கும் காலத்தில் உங்களது உடலிற் சுரக்கப்படும் புதிய ஓர்மோன்களே இம்மாற்றங்களுக்குக் காரணமாகின்றன. உங்களது மார்பகங்கள் மென்மையடையக் காண்பீர்கள். உங்களது மார்பகங்கள் மாற்றம்பெற்று பிறக்கப்போகும் குழந்தைக்குப் பாலூட்டுவதற்குத் தயாராகின்றன. இதன் காரணமாகவே உங்களது குழந்தைக்காக இச்சிறிய அசௌகரியத்தை நீங்கள் அனுபவிக்க நேரிடுகிறது. உங்களுக்கு எரிச்சல் உண்டாகக்கூடும் அத்துடன் வழக்கத்தைவிட அதிகளவு வியர்வை ஏற்பட்டு அடிக்கடி பசியேற்படும். கருவுற்றிருக்கும் காலத்தில் வழமையாக ஏற்படுகின்ற இம்மாற்றங்களைப் புரிந்து கொள்ளும்படி உங்களது பங்காளிக்கும் உங்களது குடும்பத்தவர்க்கும் கூறவும். கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படுகின்ற பொதுவான பிரச்சினைகள் பற்றி இவ்விணைப்பில் மேலும் அறிந்துகொள்ளவும். போலிக்கமிலத்திற்கு மாற்றீடான மாத்திரைகள் உண்பவராயின் அதனைத் தொடரவும். இல்லாவிடினும்கூட இன்னும் அதிக காலம் செல்லவில்லை. தினசரி போலிக் அமிலமாத்திரை ஒன்றினை உட்கொள்ள ஆரம்பிக்கவும். நீங்கள் உட்கொள்ளவேண்டிய மாற்றீடான மாத்திரைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள “உயிர்ச்சத்துக்களும் மாற்றீடுகளும்“ என்னும் எமது இணைப்பைப் பார்க்கவும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வேறு நோய்களுக்காக அல்லது உடற் பரிசோதனைக்காக மருத்துவர் எவரையாயினும் நாடுகையில், நீங்கள் கருவுற்றிருப்பதை அவருக்கு அறிவிக்கவும். அப்போதுதான் உங்களது குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் கருவுற்றிருக்கும் காலத்திற்கு உகந்த வகையில் மருந்துகளைத் தெரிவுசெய்வர்.

error: Content Protected © mummypages.lk