week-4

இவ்வாரத்தின்போது ப்ளாஸ்டோசிஸ்ட் (blastocyst) ஆனது கருவறையில் தங்கும். வழமையாக இது கருவுற்று 23 முதல் 26 நாட்களில் நடைபெறும். பின்னர் ப்ளாஸ்டோசிஸ்ட் (blastocyst) ஆனது ப்ளசென்டா (placenta) ஆகவும் குழந்தையாகவும் விருத்தியுறும். ப்ளாஸ்டோசிஸ்ட் (blastocyst) ஆனது கண்களுக்குப் புலப்படக்கூடிய அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். வாக்கியத்தின் முடிவில் இடப்படும் முற்றுப் புள்ளியினை விடவும் சிறிது பெரிதாக இருக்கும். இவ்வேளையில் துரித வௌர்ச்சிகள் இரண்டு இங்கு இடம்பெறுகின்றன. ப்ளசென்டா என்பது கருவறைக்கும் விருத்தியுறும் குழந்தைக்கும் இடையே அமைந்திருப்பதும் ஊட்டத்தினை வழங்குகின்றதுமான ஒரு உறுப்பாகும். வரைவிலக்கணப்படி விருத்தியுறும் குழந்தையானது முதல் பத்து வாரங்களில் முளையம் (embryo) எனவும் அதன்பின்னர் கருக்குளவி (fetus) எனவும் அழைக்கப்படுகின்றது. இந்நேரத்தில் சளியினாலான தடை ஒன்று உங்களது கருப்பைவாயில் (cervix) உருவாகும். கருவறைக்கும் பெண்ணுறுப்புக்கும் இடையே அமைந்திருக்கும் நுழைவாயில் கருப்பைவாயில் எனப்படும். பக்டீரியா அல்லது நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் கருவறையைப் பாதுகாப்பதற்கு சளியினாலான இத்தடை உதவுகிறது. இப்போது உறுப்புக்கள் உருவாகுதல் மிகத் துரிதமாக இடம்பெறுகிறது. இதயம் மற்றும் நரம்புத்தொகுதியாக உருப்பெறும் கலங்களினாலான அடுக்குகளுக்கு உகந்த ஊட்டத்திற்கான உதவி தேவைப்படுகிறது. முதுகெலும்புப் பிளவு மற்றும் பிறவி இருதய நோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடிய நிலையினைக் குறைப்பதற்கு உதவுகின்ற போலிக்கமிலம் விசேட முக்கியத்துவம் வாய்ந்தது. இளம் பெண்கள் கருத்தரித்திருக்கும் வருடங்களில், பசளி, கோவா, புறொக்கோலி (broccoli) மற்றும் பொதுவாகக் கிடைக்கும் கடுமையான பச்சைநிறமுள்ள கீரை வகைகள் போன்ற உயர் அளவு போலிக்கமிலம் கொண்ட உணவுகளை உண்ண வேண்டும். போலிக்கமிலத்தால் வலுப்படுத்தப் பட்டுள்ளது எனக் கூறப்படும் உணவுகளை அறிந்து உங்களது உணவிற் சேர்த்துக்கொள்ளவும். உங்களது உணவிற் சேர்க்கப்படக்கூடாதவற்றைத் தவிர்ப்பது மிகவும் முக்கியமானது. இதற்காக உணவுப்பொருட்களில் ஒட்டப்பட்டிருக்கும் விபரங்களைத் தெரிவிக்கும் தாள்களை (labels) வாசிக்கவும். எஸ்ட்ரோஜன் (estrogen) மற்றும் ப்ரோஜெஸ்டரோன் (progesterone) ஆகிய ஓர்மோன்கள் சுரப்பது இப்பொழுது மிகவேகமாக அதிகரிக்கும். இவை உங்களது உடலைப் பல வகையிலும் தயார்செய்வதுடன் உங்களுக்கு ஏற்படும் வாந்தி போன்ற காலை நோய்களிலிருந்து உடல் எடை அதிகரிப்பது வரையிலான கருத்தரித்திருக்கும் காலத்திற்கான அறிகுறிகள் பலவற்றிற்கான மூலகாரணமாகும்.

error: Content Protected © mummypages.lk