week-37

week-38

week-39

week-40

நீங்கள் இப்பொழுது கருவுற்றிருப்பதன் 37வது வாரத்தில் உள்ளீர்கள். உங்களது குழந்தை அதிகம் வளர்ந்துள்ளதுடன் உங்களது கருப்பையினுள் அது சுற்றி அசைவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட இடமே உள்ளது. குழந்தை சிறிய அளவுள்ளதாக இருந்துபோது உங்களது கருப்பையினுள் சுதந்திரமாக அசைந்தது போன்று இப்போது இலகுவாக அதனால் அசைவதற்கு இயலாது. எனவே குழந்தையின் அசைவு முறைகளில் மாற்றங்களை நீங்கள் அவதானிக்கலாம். அநேகமான வேளைகளில் அதன் உடலை நீட்டுவது போன்றும் முறுக்குவது போன்றும் நீங்கள் உணர்வீர்கள். மட்டுப்படுத்தப்பட்ட இடமாகையால் முன்பு அசைந்தது போன்று வேகமாக அதனால் அசைய இயலாது. இதற்காகப் பயப்படவேண்டாம். இது இயல்பானதே. ஆயினும் எவ்வளவு நேர இடைவெளிக்கொரு தடவை குழந்தை அசைகிறதென்பதைக் கவனிப்பதற்கு தொடர்ந்தும் அவதானமாக இருங்கள். இப்பொழுதும் இது 4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அல்லது ஒவ்வொரு 12 மணித்தியாலங்களினுள் 10 தடவை அசைதல் வேண்டும். இப்படியான அசைவுகளில் மாற்றங்கள் தென்படுமிடத்து உடனடியாக மருத்துவ உதவியினை நாடவும்.

நீங்கள் கருவுற்றிருப்பதன் 37வது வாரத்தில் எந்நேரமும் பிரசவத்திற்கான வேளை உண்டாகலாம். உங்களது குழந்தை இப்பொழுது முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதனால் இக்கால கட்டத்தில் எந்நேரம் அது பிறப்பினும் 40 வாரங்களின் பின்னர் பிறக்கின்ற எந்தக் குழந்தையைப்போன்றும் அது சாதாரணமாக உயிர்வாழும். பிரசவத்திற்கான அறிகுறிகளை உணர்ந்துகொள்வது எவ்வாறு என்பதனையும் அத்துடன் பிரசவத்தின்போது யாது நடைபெறுகிறது என்பதனையும் நீங்கள் முழுமையாக அறிவீர்கள். இவ்விடயங்கள் பற்றி மேலும் ஆய்ந்தறியுங்கள் அல்லது இப்போதும் சந்தேகங்கள் அல்லது வினாக்கள் உங்களுக்கு இருப்பின் உங்கள் மருத்துவரிடம் அல்லது மருத்துவமாதுவிடம் கேட்டறியுங்கள். மேலதிக விபரங்களை எங்களது இணையத் தளத்தில் உள்ள இவ்விணைப்பிற் காணலாம். மகப்பேற்றுவலி மற்றும் பிரசவம் பற்றி இத்தகவல் மூலங்களிலிருந்து முழுமையாக அறிந்துகொண்டு இவற்றிற்கு நீங்கள் தயார் நிலையிலுள்ளமையை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

பாராட்டுக்கள்! உங்களது பிரசவத்தின் இறுதிக்கட்டத்தில் நீங்கள் உள்ளீர்கள். கடந்த 40 வாரங்களாக நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்த மிகப்பெரிய நிகழ்வு இன்னும் சில நாட்களில் நிகழும். இவ்வாரங்களில் எந்நேரமும் உங்களுக்கு மகப்பேற்று வேதனை உண்டாகலாம். எனவே தேவையான தயாரிப்புக்கள் அனைத்தையும் செய்துள்ளதை உறுதிசெய்து கொள்ளுங்கள். மகப்பேற்று வேதனையை எவ்வாறு உணர்ந்துகொள்வது, அதன் வெவ்வேறு கட்டங்கள், மற்றும் பிரசவத்தின்போது எதிர்பார்ப்பது என்ன என்பவை பற்றி நீங்கள் நன்கு முன்னுணர்வுடன் உள்ளீர்கள் என்பதனையும் உறுதிசெய்து கொள்ளுங்கள். மேலதிக விபரங்களை எங்களது இணையத் தளத்தில் உள்ள இவ்விணைப்பினை வாசித்து அறிந்துகொள்ளுவதுடன் இறுதிநேர வினாக்கள் ஏதுமிருப்பின் உங்களது மருத்துவரிடம் அல்லது மருத்துவ மாதுவிடம் கேட்டறியுங்கள். கருவுற்றிருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் பிரசவத்திற்கு எதிர்பார்க்கப்படுகின்ற தினத்தினை உங்களது மருத்துவர் அல்லது மருத்துவ மாது குறிப்பிட்டிருப்பா். ஆயினும் குறிப்பிட்ட இத்தினத்தில் மிகச்சில குழந்தைகளே உண்மையில் பிறக்கின்றன. உங்களது குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்து உலகைக் காண்பதற்கு ஆயத்தமாகவுள்ளதுடன் அது எந்நேரமும் பிறக்கலாம். சிலவேளைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் ஜனனதினத்தைவிடத் தாமதமாக உங்களது குழந்தை பிறக்கலாம். இதுவும் மிகவழமையான ஒன்றாகும்.