week-35

பிரசவத்திற்கான காலம் நெருங்கும் பொழுது உங்களது தாயார் வீட்டிற்குச் செல்வதற்கு நீங்கள் விரும்பலாம். இலங்கையில் இதுவொரு பொதுவான நடைமுறையாகும். எவ்வாறாயினும் உங்களது இடத்திலிருந்து மிகத்தூரமான இடத்தில் அல்லது வேறொரு மாவட்டத்தில் வசிப்பவராயின் அங்கு செல்வதற்கு நீங்கள் பயணிக்கவேண்டிய தூரத்தினைக் கருத்திற் கொள்ளவும். நீங்கள் வசிக்கின்ற மாவட்டத்தில் உள்ள மருத்துவ வசதிகளை அறிந்து பிரசவத்தின்போது உங்களுக்கும் உங்களது குழந்தைக்கும் சிறந்த மருத்துவக் கவனிப்பு எங்கு கிடைக்கும் என்பதை ஆராய்ந்து பார்க்கவும். பிரசவத்திற்கு உங்களது இடத்திற்கு மீண்டும் வருவதற்கு முன்பு நீங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள வீதிகளின் நிலைமை அத்துடன் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றைக் கருத்திற் கொள்ளவும். வீதிகள் சேதமடைந்த நிலையில் இருப்பின் அல்லது உங்களது பெற்றோரது வசிப்பிடத்திலிருந்து அண்மையிலுள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாதிருப்பின் பிரசவ நேரம் கிட்டும்போது கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடலாம்.

 

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கவனிப்பது எப்படியென்பதை நீங்கள் இதுவரை அறிந்திருக்காதிருப்பின் அதைப்பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொள்வதற்கு இதுவே நல்ல தருணம். இதனைப்பற்றிய பயனுள்ள தகவல்கள் பலவும் எமது இணையத் தளத்தில் நீங்கள் காணலாம். உங்களது மருத்துவரும் மற்றும் மருத்துவ மாதுவும் பயனுள்ள பல துண்டுப்பிரசுரங்கள், தகவல்வழங்கும் ஏடுகள் மற்றும் சிறிய நூல்கள் ஆகியனவற்றை உங்களுக்கு வழங்குவர். நீங்கள் அவற்றை நன்கு வாசித்து, பிரசவத்திற்குத் தயாராகுதல் மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல், அத்தடன் மேலும் பல வி்டயங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் இவ்வகையான தகவல்களைப் பெறாவிடில் உங்களது மருத்துவமாதுவிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.