week-34

34 முதல் 35 வாரங்களுக்குள் என்ன நடைபெறுகிறதென்பதை இப்பொழுது பார்ப்போம். குழந்தை பிறப்பதற்குக் குறிப்பிட்டுள்ள தினத்திற்கு முதல் உங்களுக்கு பிரசவம் ஏற்பட்டால் அப்பொழுது ஆரோக்கியமான, முழுநிறைவான நிலையில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புக்கள் மிவும் உயர்வாகும்.

 

இப்பொழுது உங்களது குழந்தையின் சுவாசப்பைகள் முழுமையாக உருவாகியுள்ளதுடன் அவை தனித்து இயங்கக்கூடியனவாகவும் இருக்கும். எனவே உங்களது குழந்தை பிறந்தால் காற்றைச் சுவாசித்து உங்களது உடலுக்கு வெளியே உயிர்வாழும் ஆற்றல் உங்களது குழந்தைக்கு இருக்கும். இவ்வேளையில் நீங்கள் எந்நேரமும் குழந்தைப் பிரசவத்திற்குச் செல்லவேண்டிவரும் எனும் விழிப்புணர்வு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ஆகவே நீங்கள் இதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இப்படியான நெருக்கடி நேரத்தில் தூர இடங்களுக்குப் பயணஞ்செய்வதனைத் தவிர்க்கவும்.

error: Content Protected © mummypages.lk