week-32

week-33

இவ்விரு வாரங்களின்போது உங்கள் குழந்தைக்கு ஏற்படும் மாற்றங்கள் பற்றி இப்போது பார்ப்போம். இப்பொழுது உங்கள் குழந்தை ஏறத்தாழ 2.2 கிலோ எடையுள்ளதாக இருக்கும். குழந்தை உருவத்தி்ல் பெரிதாக வளர்ந்ததுள்ளது மாத்திரமல்ல அதன் இயல்புகளும் செயலாற்றல்களும்கூட முன்னேற்றம் கண்டிருக்கும். உங்கள் வயிற்றுக்குள் குழந்தையின் திடீர்த் துள்ளல்களின் உணர்வு உங்களுக்கு ஏற்படக்கூடும். பயப்படவேண்டாம், இது வழக்கமானதே. உங்களது குழந்தைக்கு இப்பொழுது விக்கல் ஏற்பட்டுள்ளதன் விளைவாகவே இத்துள்ளல் ஏற்பட்டுள்ளது. இவ்வேளையில் உங்களது கருப்பையினுள் குழந்தை உள்ள நிலைபற்றி உங்களது மருத்துவரும் மருத்துவ மாதுவும் விசேட கவனம் செலுத்துவர். அநேகமான குழந்தைகள் பிறக்கும்போது முதலிற் தலை வெளியேறும் நிலையில் பிறக்கும் என்பதனை இவர்கள் உங்களுக்கு முன்பே கூறியிருப்பர். ஆயினும் சிலவேளைகளில் மாறாகப் பின்புறம் முதலில் வெளியேறும் நிலையில் குழந்தைகள் பிறப்பதுண்டு. அநேகமான குழந்தைகள் முதலிற் தலை வெளியேறும் நிலையிற் பிறப்பதால் இவ்வேளையில் குழந்தையின் தலை உங்களது இடுப்பெலுப்புக் கால்வாய்க்குச் சமீபமாக கீழ்நோக்கி இருப்பதுடன், இடுப்பெலுப்புக் கால்வாய்க்குள் நுழைவதற்குரிய நேரம்வரும்வரை ஆயத்தமாகக் காத்திருக்கிறது. இவ்வேளையில் உங்களது குழந்தையின் தலை கீழ்நோக்கிய நிலையில் இல்லாது விடினும் பயப்பட வேண்டியதி்ல்லை. பிறப்பதற்கு இன்னமும் நேரம் இருப்பதால். அடுத்த சில தினங்களுக்குள் குழந்தையானது உருண்டு அதன் தலை கீழ்நோக்கிய நிலைக்கு வந்துவிடும்.

 

இக்காலகட்டத்தில் உங்களது குழந்தையின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். இவ்வேளையில் உங்களது மருத்துவர் அல்லது மருத்துவமாது ஒவ்வொரு மருத்துவக் கிளினிக்கின்போதும் உங்களது வயிறு எந்தளவுக்கு விரிவடைந்துள்ளது என்பதையும் உங்களது குழந்தை எந்த வீதத்தில் வளர்ந்துள்ளது என்பதையும் கணிப்பதற்கு உங்கள் வயிற்றினை அளவிடுவர். குழந்தையின் பிறப்பிற்கு இட்டுச்செல்லும் இவ்வேளை பற்றி இவர்கள் மிகுந்த கவனம் செலுத்துவா். 24வது வாரத்திலிருந்து உங்களது குழந்தை எந்தளவு ஆரோக்கியத்துடன் உள்ளது என்பதைனைக் கண்டறிவதற்கு இவர்கள் ஒவ்வொரு மருத்துவக் கிளினிக்கின்போதும் உங்களது குழந்தையின் இதயத்துடிப்பினைச் சரிபார்த்துக் கொள்வர்.

 

உங்களது சருமம் மிகவும் விரிவடைந்த நிலையில் உள்ளதால் அதற்கான அடையாளங்கள் பெரிதாகக் கண்ணுக்குப் புலப்படக்கூடும். 32வது வாரத்தின் பின்னர் உங்களது வயிற்றினுள் குழந்தையின் அசைவுகளையிட்டு நீங்கள் விசேட கவனம் செலுத்துதல்வேண்டும். ஏனெனில் குழந்தையின் செயற்பாடுகள் குறைவடைந்திருப்பின் அல்லது குழந்தை அசையும் முறைகளில் மாற்றங்கள் தென்படின் உங்களது கருப்பையினுள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அபாயம் அல்லது அச்சுறுத்தல் ஏதாவது ஏற்பட்ட காரணத்தினால் ஆகலாம். ஆரோக்கியமான குழந்தைகள் சராசரியாக 12 மணிநேரத்தில் 10 தடவைகள் அசைகின்றன. அதுவும் அதிகுறைந்தது 4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அசைகின்றன என விஞ்ஞான ஆராச்சிகள் நிரூபிக்கின்றன. உங்களது குழந்தை எத்தனை தடவைகள் அசைகிறது என்பதனை எண்ணிக்கொள்வதுடன் அசைவுகளுக்கு இடையில் ஏற்படும் நேரத்தினையும் குறித்துக் கொள்ளவும். குழந்தை அசையும் தடவைகளை எண்ணுவதற்காக நீங்கள் இரவில் விழித்திருக்க வேண்டுமென்று நாம் இங்கு கூறவில்லை. பகல்வேளைகளில் 12 மணித்தியாலங்கள் நீங்கள் விழித்திருக்கும்போது உங்களது குழந்தையின் அசைவுகளைக் குறித்துக்கொள்வதுடன் எத்தனை தடவைகள் நீங்கள் அசைவுகளை உணர்ந்தீர்கள் என எண்ணுங்கள். குழந்தை உங்களது கருப்பையினுள் அதிகநேரம் தூங்குமாயினும் எந்தவொரு குழந்தையும் ஒருதடவையில் 4 மணித்தியாலங்களுக்குமேல் தூங்குவது கிடையாது. எனவே 4 மணித்தியாலங்களுக்கு ஒருதடவை அது கட்டாயமாக அசைவடையும். எதுவித அசைவுகளும் 4 மணித்தியாலங்களுக்கு மேல் இல்லாதிருப்பின் உடனடியாக மருத்துவ உதவியினை நாடவும்.

error: Content Protected © mummypages.lk