week-29

week-30

week-31

உங்களுக்குள் ஏற்படும் உங்களது குழந்தையி்ன் அசைவுகளுக்கு இப்பொழுது நீங்கள் பழக்கப்பட்டு இருக்கக்கூடும். இப்பொழுதுவரை நீங்கள் இதனை உணரக்கூடும். இப்பொழுது எவராவது உங்களது வயிற்றில் கைவைத்துப் பார்ப்பின் குழந்கையின் அசைவுகளையும் மேலும் அதனது சிறிய குத்துக்களையும் உதைகளையும் உணரக்கூடும். உங்களது வயிற்றில் நீங்கள் கைவைத்து அழுத்தினால் குழந்தையானது அசைந்து உங்களுக்கு மீள்தகவாக உணர்த்தும். உங்களது தொடுவுணர்ச்சி அதற்கு ஏற்கெனவே உள்ளதனால் உதைக்கச் செய்யும். இக்காலகட்டத்தில் உங்களது குழந்தை இவ்வாறே உங்களுடன் தொடர்பு கொள்ளும். பிறக்காத உங்களது குழந்தைக்கும் உங்களுக்கும் இடையே பலமான பிணைப்பும் தொடர்பும் ஏற்கெனவே உண்டாகியுள்ளது.

உங்களது கருத்தரிப்பின் 29 முதல் 31வது வாரங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் விருத்திகள் பற்றி இப்பொழுது பார்ப்போம். இவ்வேளையில் அதிகளவு அசௌகரியத்தை நீங்கள் அனுபவிக்கக்கூடும். ஏனெனில், உங்களது குழந்தை இப்பொழுது துரிதமாக வளர்வதுடன் விரிவடையும் உங்களது கருப்பை பிற உறுப்புக்களில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாலாகும். தூக்கமின்மை தொடர்வதுடன் நெஞ்செரிவினையும் நீங்கள் அனுபவிக்கக்கூடும். அசௌகரியத்தைக் குறைப்பதற்குக் கடந்த வாரங்களில் நாம் கூறியிருந்த அதே ஆலோசனைகளைப் பின்பற்றவும். ஒருபக்கமாகச் சரிந்து அல்லது முதுகின்கீழ் சில தலையணைகளை வைத்துத் தூங்குவதன்மூலம் நெஞ்செரிவினையும் முதுகுவலியினையும் குறைத்து இரவில் நல்ல தூக்கத்துடன் ஓய்வெடுக்க உதவும். உங்களது வயிறு விரிவடைவதால் இவ்வேளையில் எழுந்துநிற்பது, நடப்பது, இருப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். நடக்கும்போதும் எழுந்து நிற்கும்போதும் நன்கு நிமிர்ந்த சரியான நிலையினைப் பேணிக்கொள்வும். நீங்கள் இருக்கும்போது உங்களது முதுகினை இயலுமானவரை நேராக வைத்துக்கொள்ள முயற்சிக்கவும். இத்தகைய நடைமுறைகள் மூலம் நீங்கள் முதுகு வலியினைக் குறைக்கலாம். இத்தகைய அசௌகரியங்கள் காரணமாக நீங்கள் மனம்தளரவேண்டாம். அத்துடன் உங்களது மகப்பேற்றுத் தினம் நாள்தோறும் நெருங்கி நெருங்கி வருவதால் இவற்றிற்கு முடிவு விரைவாகக் கிடைக்கும்.

உங்களது கருப்பையினுள்ளே மிகச்சிறியளவு சுருக்கத்தை நீங்கள் உணரக்கூடும். பயப்படவேண்டாம் இது சாதாரணமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் சமயத்தில் குழந்தை வெளியேற உதவுவதற்காக கருப்பையின் சுவர்களும் மற்றும் தசைநார்களும் சுருங்கவேண்டிய நிலையேற்படும். இதற்காகக் கருப்பையானது தன்னை ஆயத்தம்செய்கிறது. எனவே இவ்வேளையில் உங்களது வயிற்றினுள் இருக்கும் கருப்பையின் தசைநார்கள் இறுக்கமடைந்து பின்னர் தளர்வடைவது போன்ற உணர்வு அடிக்கடி உங்களுக்கு ஏற்படும். இந்நிலை நீண்ட நாட்களாக நடைபெறாவிடின் அல்லது ஒழுங்கற்ற விதத்தில் ஏற்படின் அல்லது இறுகித் தளர்வதால் எதுவித வலியும் உங்களுக்கு ஏற்படாது விடின் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. இது சாதாரண நிகழ்வேயாகும். ஆயினும் இறுகித் தளரும் இந்நிலை நீண்ட நாட்களாக தொடர்ச்சியாகத் தீவிரமாகி ஒழுங்கான தாளகதி முறையில் ஏற்பட்டால் அல்லது இறுகித் தளரும் இந்நிலைகளின்போது வலி ஏற்பட்டால் மருத்துவரின் உதவியை நாடவும் ஏனெனில் உங்களுக்குக் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இவை இருக்கும். எனவே இறுகித் தளரும் இவ்வேளைகளில் அவதானமாக இருக்கவும். மேலும் குழந்தை பிறப்பதற்கான பிரசவ வலி ஏற்பட்டால் அண்மையிலிருக்கும் வைத்திய நிலையத்திற்குச் செல்லவும்.