week-28

பாராட்டுக்கள்! நீங்கள் இன்னொரு மைல்கல்லினைத் தாண்டியுள்ளீர்கள், உங்களது கருத்தரிப்பின் மூன்றில் இரண்டு பங்கு காலத்தினைக் கடந்துவிட்டீர்கள். நீங்கள் எதிர்பார்த்துள்ள நாள் உதயமாகி இறுதியாக உங்கள் கைகளில் உங்களது குழந்தையை ஏந்துவதற்கு இன்னமும் 3 மாதங்களே உள்ளன. இவ்வேளையில் எதிர்பாராவண்ணம் குறைகாலப் பிரசவம் ஏற்படின், இலங்கையிலுள்ள அதிகமான மகப்பேற்று மருத்துவமனைகளில் சிறந்த வசதிகள் உள்ளன என்பதன் அடிப்படையில் உங்கள் குழந்தை உயிர்பிழைக்கும் சாத்தியம் அதிகளவு உள்ளது.

இப்பொழுது இலங்கையில் நீரிழிவுநோய் ஏற்படுநிலை அதிகளவு அதிகரித்திருப்பதைக் கருத்திற் கொண்டு கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அவர்களது 24 முதல் 28ம் வாரங்களில் நீரிழிவுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் அவசியமென சுகாதார அமைச்சினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. உங்களதும் உங்களது குழந்தையினதும் ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொள்வதற்கு இப்பரிசோதனையைச் செய்துகொள்ளுமாறு நாம் பெரிதும் பரிந்துரைக்கிறோம்.

 

இனிவரும் கடைசி 3 மாதங்களின்போது எவ்வகையான முக்கிய விருத்திகள் ஏற்படுமென இப்போது பார்ப்போம். இப்பொழுது உங்களது குழந்தையின் உறுப்புக்கள் யாவும் உருவாகியிருக்கும். இக்காலகட்டத்தில் இவைகள் துரிதமாக வளர்ச்சியடைவதுடன் உங்களது குழந்தையின் எடையும் இதனுடன் இணைந்து வேகமாக அதிகரிக்கும். எனவே இக்காலகட்டத்தின்போது உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவதற்குரிய போதியளவு ஊட்டத்தினை நீங்கள் உட்கொள்ளவேண்டியது அத்தியாவசியமாகிறது.

 

நாம் முன்பு உங்களுக்கு நினைவுறுத்தியதுபோல் இயலுமானவரையில் உங்களது மனத்தை மகிழ்ச்சியாகவும் பிரச்சினைகள் ஏதுமற்ற நிலையிலும் வைத்திருக்கவும். இக்காலகட்டத்தில் நீங்கள் கடுமையான வேலைகளை அல்லது உடற்பயிற்சிகளைச் செய்து உங்களை அதிகம் களைப்படையச் செய்யாதீர்கள் ஏனெனில் உங்களது குழந்தையின் வளர்ச்சியினை இது பாதிப்படையச் செய்யலாம்.

error: Content Protected © mummypages.lk