week-24

23 வாரங்களில் உங்களது குழந்தையிடத்து குறிப்பிடத்தக்க மிகமுக்கியமான விருத்திகள் ஏற்பட்டிருக்கும். இவ்வேளையில் உங்களது குழந்தையின் உறுப்புக்கள் மற்றும் முகவசீகரத் தோற்றங்கள் அனைத்தும் உருவாகியிருப்பதுடன் அதன் தலையின்மீது முடியும் உருவாகி இருக்கும். குழந்தையினது கண்ணின்மேல் புருவங்கள் 24 வாரங்களில் உருவாகியிருக்கும். குழந்தையின் சுவாசப்பைகள் இப்போது உருவாகி இயங்க ஆரம்பித்திருக்கும். குழந்தை இப்போது மிகச்சிறிய அளவிலான பொம்மையைப் போன்று தோற்றமளிக்கும். உங்களது குரலினை இனங்காணும் ஆற்றல் இப்பொழுது குழந்தைக்கு ஏற்பட்டிருப்பது இவ்வேளையில் மிகவும் முக்கியமான விடயம். உங்களது குரலின் ஓசையினை குழந்தை தனது தாயின் குரலாக இனங்கண்டு அறிந்திருக்கும்.

உங்களது முரசுகள் மிகவும் கூச்சமான உணர்வுள்ளனவாக இருப்பதனை நீங்கள் அவதானித்திருக்கலாம். நீங்கள் பல் துலக்கும் வேளைகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதனையும் நீங்கள் அவதானித்திருக்கலாம்.  இது வழமையான ஒரு நிகழ்வு ஆகும் ஏனெனில் இது கருவுற்றிருக்கையில் ஓமோன்களினால் ஏற்பட்ட மாற்றங்களாகும். எப்படியாயினும் இதன்காரணமாகப் பல் துலக்குவதனை நிறுத்தவேண்டாம். கருவுற்றிருக்கையில் உங்களது வாயினைச் சுகாதாரமாகப் பேணுவது மிகவும் அவசியமாகும். கருவுற்றிருக்கும் வேளையில் நீரிழிவுநோய் ஏற்பட்டிருந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கைகள் அதிகரித்தவாறுள்ளன. இதற்கு முன்னர் நீங்கள் கருவுற்றிருந்த வேளையில் உங்களுக்கு நீரிழிவுநோய் ஏற்பட்டிருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தினர் எவருக்காவது நீரிழிவுநோய் ஏற்பட்டிருந்தால் உங்களது குருதியிலுள்ள சர்க்கரையின் அளவை உங்களது மருத்துவர் தொடர்ந்து கண்காணிப்பதுடன் அதற்குகந்த குருதிச்சர்க்கரைப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தக்கூடும்.

error: Content Protected © mummypages.lk