week-23

இவ்வாரங்கள் துரித வளர்ச்சியைக் கொண்ட வாரங்களாகும். உங்களது குழந்தையின் வளர்ச்சியுடன் இணைந்து உங்களது எடையும் மிகத் துரிதமாக அதிகரிக்கும். உங்களது எடை அதிகரிப்பு சராசரியாக வாரம் ஒன்றுக்கு ஏறத்தாழ 250 கிராமாக இருக்கக் காண்பீர்கள். கருத்தரித்த ஆரம்பகால கட்டத்தின்போது ஏற்பட்டிருந்த அசௌகரியங்கள் இவ்வேளையில் அநேகமாக இல்லாதிருப்பினும் உங்களது வயிறு துரிதமாகப் பெருத்து வளருவதால் இரவுநேரத்தில் நீங்கள் ஒருக்களித்து தூங்குவது உங்களுக்குச் சிரமமாக இருக்கும். தூங்குவதற்குச் சௌகரியமான நிலையேற்படும்வரை பலவிதமான படுக்கை நிலைகளைப் பரிசோதித்து அறிந்துகொள்ளுங்கள். உங்களது வயிற்றிற்கு ஆதரவாக முட்டுக்கொடுப்பதற்கும் அத்துடன் முதுகுவலி ஏற்படாது தவிர்த்துக்கொள்வதற்கும் மேலும்சில தலையணைகளைப் பயன்படுத்தலாம்.