week-22

ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டிய இன்னொரு விடயமும் இங்குள்ளது. புத்திசாதுரியமும், நன்கு விருத்தியடைந்த அறிவாற்றலும் உள்ள பிள்ளைகளைப் பெறவேண்டுமென நாம் அனைவரும் எதிர்பார்ப்பதுண்டு. இவ்வொருசில வாரங்களின்போது உங்களது குழந்தையின் மூளையானது துரிதமாக விருத்தியடையும். எனவே கல்சியச்சத்து மற்றும் இரும்புச்சத்து வழங்குகின்ற குறைநிரப்பிகளைத் தொடர்ந்து உட்கொள்ளவேண்டும் என்பதனை ஞாபகத்திற் கொள்வதுடன் ஆரோக்கியமான சமபோசணை நிறைந்த உணவினை உட்கொள்வதனை உறுதிசெய்துகொள்ளவும். இப்படிச் செய்வதனால், உங்களது குழந்தையின் மூளை விருத்திக்கு உதவுவதற்கென விசேடமான குறைநிரப்பு உணவுகளுக்கு அதிலும் விசேடமாக ஊட்டமேற்றப்பட்ட பால்மா வகைகளுக்கு மேலதிக பணம் செலவு செய்யவேண்டிய தேவை ஏற்படாது.