week-21

பாராட்டுக்கள்! உங்களது கருத்தரிப்பின் அரைவாசி காலத்தினைக் கடந்துவிட்டீர்கள். இம்மைல்கல்லினைத் தாண்டியது பற்றி நீங்களும் உங்களது பங்காளரும் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள். இப்பொழுது உங்களது எடையானது குறிப்பிடத்தக்களவு அதிகரிக்க ஆரம்பிக்கும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்வதனையும் போதியளவு உடற்பயிற்சினையும் தொடர்வது இங்கு முக்கியமானதாகிறது. நடப்பது இங்கு விசேடமாக உதவும். உடற்பயிற்சியானது உங்களது இடுப்பெலும்புத் தசைநார்களைக் குழந்தை பெறுவதற்கேற்றவாறு வலுவுள்ளதாக்குவதுடன் குழந்தை பெறுவதற்கு ஆயத்தமாக உங்களது உடலைப் பலமுள்ளதாக்கவும் உதவுகிறது. ஆயினும் உங்களை அதிகம் வருத்தாது கவனம் எடுக்கவும். உகந்த உடற்பயிற்சினைப் பற்றி மேலும் அறிவதற்கு இவ்விணைப்பினை நாடவும்.

இப்பொழுது உங்களது குழந்தையின் எடை ஏறத்தாழ அரை கிலோவிலும் சிறிது குறைவாக இருக்கும். சுற்றுச் சூழலை உணரும் அதனது ஆற்றல் இப்போது அதிகரித்திருக்கும். நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது உள்ள ஒளி மற்றும் ஒலியின் அளவுகளை உணரும் ஆற்றலுடையதாகக் குழந்தை இருப்பதுடன் அது எந்த நேரத்திற் தூங்கவேண்டும் அத்துடன் எந்த நேரத்தில் எழுந்திருக்கவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கின்றது. தூங்குவதற்குச் செல்கின்ற நேரமாதிரிகளின் அடிப்படையில் அதனது அசைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. குழந்தையானது எப்போது தூங்கவேண்டும் எப்போது எழுந்திருக்கவேண்டும் என்பதனைத் தீர்மானிக்கப் பயன்படுத்துவதானது உங்களது கருவறையினுள் அதற்கென சிறியதொரு கடிகாரம் உள்ளதனைப் போன்றுள்ளது

error: Content Protected © mummypages.lk