week-17

week-18

உங்களிடமும் உங்களது குழந்தையிடமும் 19ம் 20ம் வாரங்களின்போது ஏற்படுகின்ற விருத்திகள் மற்றும் மாற்றங்களைப் பற்றி இப்போது பேசுவோம்.

இப்பொழுது உங்களது குழந்தையின் முரசுகளினுள்ளே பால்பற்கள் உருவாகியிருக்கும். இதுமாத்திரம் அல்ல இப்பால் பற்களின் அடியில் முதிர்ச்சியுற வேண்டிய பற்களி்ன் நகல் உருவாக ஆரம்பிக்கும். பிறப்பின் பின்னரே குழந்தைக்கு பற்கள் முளைக்கின்றன என நாம் எண்ணினும் உண்மை அதுவல்ல. ஆனால் குழந்தை கருவறையினுள் உள்ளபோதே அதற்குப் பற்கள் உருவாக ஆரம்பிக்கின்றன என்பதே உண்மை. குழந்தை இப்பொழுது சுற்றிலும் நோட்டம்விட ஆரம்பிக்கின்றது ஆயினும் அது இன்னும் கண்ணைத் திறக்கவில்லை.

கல்சியச் சத்துக்கான மாத்திரைகளை உட்கொள்ளவும் அத்துடன் கல்சியச் சத்துநிறைந்த உணவுகளை உங்களது உணவுடன் சேர்த்துக்கொள்ளவும் மறந்திருக்க மாட்டீர்களென நம்புகிறோம். குழந்தையினது பற்களும் எலும்புகளும் ஆரோக்கியமாக விருத்தியாவதற்கு கல்சியச்சத்து அத்தியாவசியமானதாகும். இவ்வாரங்களில் உங்களது குழந்தையிடத்தில் அநேக துரிதமான மாற்றங்கள் இடம்பெறுகின்றன. திரவப்பதார்த்தம் கொண்ட பையினுள் உங்களது குழந்தை வாழ்கிறது என நாம் முன்பு குறிப்பிட்டிருந்தோம். இப்போது குழந்தையினது மிருதுவான சருமத்தை திரவத்திலிருந்து பாதுகாப்பதற்கு, மெழுகு பொன்றதொரு பொருள் அதன் சருமத்தின்மீது உருவாக ஆரம்பிக்கிறது. இந்நிலையில் உங்களது குழந்தை எறத்தாழ 250 முதல் 300 கிராம் எடை கொண்டதாக இருக்கும். குழந்தையின் உணரும் உறுப்புக்கள் இப்போது விருத்தியாக ஆரம்பிக்கும். அது ஓசைகளைக் கேட்பது மாத்திரமல்ல முகரவும் பொருட்களை ருசிபார்க்கவும் அதனால் இயலும்.