week-14

week-15

week-16

உங்களது குழந்தையானது உங்களினுள் அசைவதை உணரும் நாள்வரை நீங்கள் பொறுமையற்று காத்திருக்கக்கூடும். ஏறத்தாழ 18 வாரங்களாகும்போது முதன்முதலில் உங்களுக்குள் குழந்தை அசைவதை உணர ஆரம்பிப்பீர்கள். உங்களுக்குள் குழந்தை அசைவதை உணர ஆரம்பித்த முதல்நாள் மிகவும் முக்கியமானதாகும். அந்நாளைக் காலண்டரில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். இவ்வேளையில் பலவிதமான பிறமாற்றங்கள் இடம்பெறுகின்றன. பெருத்துவரும் உங்களது கருவறை இடுப்பெலும்புக் குளியிலிருந்து மெதுவாக மேல்நோக்கி உங்களது வயிற்றுக்குளி நோக்கி அசைந்து செல்லும். இதுநடைபெறும்போது உங்களது இடுப்புப்பகுதி உருமாற ஆரம்பிப்பதுடன் விரிவடையும். இக்காலகட்டத்தில் உங்களுக்கு அதிகம் வியர்வை ஏற்படுவதனை அவதானிப்பீர்கள்.

இது மிகச் சாதாரணமான ஒரு விடயம். உங்களது பெண்உறுப்பிலிருந்து திரவப்பதார்த்தம் வெளியேறுவது அதிகரித்திருப்பதையும் அவதானிப்பீர்கள். இது சாதாரண விடயமாயினும் குருதி வெளியேற்றப்படுதல்  அல்லது துர்நாற்றம் ஏற்படுதல் அவதானிக்கப்படின் உடனடியாக மருத்துவரை நாடவும். உங்களது குழந்தை இப்பொழுது ஓசைகளை கேட்கத் தொடங்கும். நீங்கள் அதிக கவனம் செலுத்தவேண்டிய விடயம் இதுவாகும் ஏனெனில் உரத்த ஓசைகள் உங்களது குழந்தைக்குக் குழப்பம் உண்டாக்கும். உரத்த வாக்குவாதங்கள், சண்டைகள் அல்லது உடன்பாடின்மை ஆகியவற்றில் ஈடுபடுவதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு விசேட கவனம் செலுத்தவும். அதிலும் குறிப்பாக உங்களது பங்காளருடன் இதனைத் தவிர்க்கவும். இச்சத்தங்கள் குழந்தைக்குக் கேட்கும் அத்துடன் கடுமையான மற்றும் உரத்த சத்தங்கள் குழந்தைக்குப் பிடிப்பதில்லை. வெறுப்பு ஊட்டுகின்ற எதனையும் உங்களது குழந்தை கேட்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அப்படித்தானே? மனத்திற்கு ரம்மியமான இசையினைக் கேட்கவும் அத்துடன் உங்களது குழந்தையுடன் பேசுங்கள் அல்லது பாட்டு பாடுங்கள். உங்களது குழந்தை இதனைக் கேட்பதுடன் பதிலாக உங்களுக்குள் அசைந்து காண்பிக்கும். பிறப்பதற்கு ஆயத்தமாவதற்கு உங்களது குழந்தையின் இயற்திறன்கள் துரிதமாக வளர்ச்சியுறும். நாம் முன்பு கூறியதுபோல் உங்களது குழந்தை இப்பொழுது நன்கு உறுஞ்சும். சிலவேளைகளில் தனது பெருவிரலை வாயில்வைத்து உறுஞ்சவும் கூடும். இ்பொழுது காலால் உதைக்கவும் கைகளின் முஷ்டியினால் குத்தவும் செய்யும்.