week-13

உங்களது குழந்தை இப்பொழுது வேகமாக வளர்கின்றது. ஒரு வாரத்திற்குள் ஏறத்தாள 2 சென்டி மீட்டா்கள் வளர்ந்திருக்கும். இக்கணம்வரை நாம் இந்த விடயத்தைக் கூறவில்லை. அதாவது உங்களுக்குள் அமைந்துள்ள திரவபதார்த்தைக்கொண்ட ஒரு சிறிய பையொன்றினுள்ளேயே உங்களது குழந்தை நீந்துகிறது. இப்பையானது அம்னியோடிக் பை (amniotic sack) என அழைக்கப்படுகிறது (நீர்க்குடம் எனவும் அழைக்கப்படுகிறது). குழந்தையைச் சூழ்ந்துள்ள திரவப் பதார்த்தமானது உங்களது நாளாந்தப் பணிகளை மேற்கொள்ளும்போது ஏற்படுகின்ற சிறு துள்ளல்கள் மற்றும் தாக்கங்களினின்போது ஒரு மெத்தையைப்போன்று பயன்பட்டுக் குழந்தையைப் பாதுகாக்கிறது.உங்களது குழந்தையின் சிறுநீரகம் இப்போது சிறுநீரினை வடிகட்ட ஆரம்பிக்கிறது. ஒரு வாரத்தில் உங்களது குழந்தையினால் இப்போது அதனது தலையை அசைக்கவும் முடிகிறது. நச்சுக்கொடி (ப்ளசென்டா-placenta) முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளதுடன் ஓர்மோன்களைச் சுரக்கவும் ஆரம்பித்துள்ளது. உங்களது குழந்தையின் மார்பு சுவாசிப்பதைப்போன்று அசைந்தாலும் அதற்குத் தேவையான ஒட்சிசனை தொப்புள் கொடியினூடாகவும் நச்சுக்கொடியினூடாகவும் பெற்றுக்கொள்கிறது. இவ்வேளையில் நீங்கள் பாதுகாப்பிற்காக  ஏற்புவலித் தடுப்பு ஊசியினைப் (tetanus) போட்டுக்கொள்வது உகந்ததாகும். இப்பொழுது நீங்கள் இரும்புச்சத்து, உயர்ச்சத்து-சி மற்றும் கல்சியம் ஆகிய மாத்திரைகளை உண்ண ஆரம்பித்திருப்பீர்கள். இல்லையா? உங்களது குழந்தையின் பற்கள், முடி மற்றும் எலும்புகள் ஆகியன இப்போது உருவாகின்றன. இவை நன்றாக வளர்ச்சியடைவதற்குக் கல்சியம் அவசியமானது. ஆரோக்கியமான குருதிக் கலங்களை பேணிக்கொள்வதற்கு இரும்புச்சத்து அவசியமாகிறது. இரும்புச்சத்து மாத்திரைகளை இரவு நேரத்திலும் கல்சியச்சத்து மாத்திரைகளை காலையிலும் உட்கொள்ளவும்.

error: Content Protected © mummypages.lk