week-11

உங்களது குழந்தை இப்பொழுது ஏறத்தாழ 4.5 சென்டிமீட்டர் நீளமுடையதாக இருக்கும். அதனது பாலுறுப்புகள் உருவாக ஆரம்பித்திருக்கும். இன்றியமையாத உடலுறுப்புக்கள் யாவும் இப்போழுது முழுவதுமாக உருவாகியிருப்பதுடன் அவைகள் வளர ஆரம்பிக்கும். பலவிதமான விருத்திகள் உண்டாகியிருந்தாலும் உங்களது வயிறு இன்னமும் உருவத்தில் பெரிதாகவில்லை. ஏனெனில் உங்களது கருப்பையானது இடுப்பெலும்புப் பள்ளத்தில் அமைந்துள்ளது.

 

உங்களது போசாக்கானது இவ்வேளையில் மிகவும் அவசியமானது. எனவே போசாக்கான உணவுகளை போதியளவு நீங்கள் உண்பது மிகவும் அவசியம் என்பதுடன் இதன்மூலம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் பேணிக்கொள்க. நீங்கள் போதியளவு உணவுகளை உட்கொள்ளத்தக்கதாக அருவருப்பு மற்றும் குமட்டல் உணர்வுகள் இப்போது குறைந்திருக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப்பற்றி இவ்விணைப்பில் மேலதிகமாக அறிந்துகொள்ளலாம். ஊடுகதிர்ப்படம் (scan) ஒன்றினைச் செய்வதற்கு நீங்கள் நினைத்தால் இதுவே சிறந்த தருணம். உங்களது குழந்தையின் வயது 11 முதல் 14 வாரங்களாக உள்ளபோது ஸ்கான் ஒன்றினைச் செய்வதால் உங்களது பிரசவ தினத்தினை திருத்தமாக முற்கூறுவதற்கு மருத்துவர்களை இயலச்செய்யும்.

error: Content Protected © mummypages.lk