week-10

உங்களது குழந்தை இப்பொழுது ஏறத்தாழ ஒன்றரை அங்குல நீளமுடையதாக இருக்கும். பிரசவத்தின்போது 3 கிலோ எடையுள்ள குழந்தையினைப் பிரசவிக்க நாம் எல்லோரும் எதிர்பார்ப்பதுண்டு. இப்பொழுது உங்கள் குழந்தை 10 கிராம் வரையில் எடை கொண்டதாக இருக்கும். உங்களது குழந்தையின் எலும்புகள் மற்றும் குருத்தெலும்பு (cartilage) ஆகியன இப்பொழுது விருத்தியடைய ஆரம்பித்திருக்கும். உள்ளக உறுப்புகள் அனைத்தும் இப்பொழுது அநேகமாக உருவாகியிருக்கும். சிறுநீரகங்களும் ஈரலும்கூட இயங்க ஆரம்பித்திருக்கும். தொப்புள்கொடி இப்போது உருவாகியிருக்கும். குழந்தையானது முன்பு அதற்குத் தேவையான அனைத்து ஊட்டங்களையும் உங்களது குருதியிலிருந்து பெற்றது ஆனால் இப்போது இக்கொடியின் ஊடாகப் பெறுகிறது. உங்களது குழந்தையும் நீங்களும் ஆரோக்கியமாக இருப்பதனை உறுதிசெய்வதற்கு, இயலுமானவரையில் பிரச்சினைகளற்ற நிலையிலும் சந்தோசமாகவும் உங்களது மனம் இருப்பதனை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

error: Content Protected © mummypages.lk