வாரம் 1 – வாரம் 2

வாரம் 1

கருவுற்றிருக்கும் காலத்திற்கான உங்களது நாட்காட்டி (Calendar) 40 வாரங்களைக் கொண்டதாகும். எனினும் மூன்றாவது வாரம்வரை நீங்கள் உண்மையில் கருவுற்றிருப்பதில்லை. ஏனெனில் உங்களுக்கு ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் (எல்.எம்.பி – LMP -Last Menstrual period) இருந்தே உங்களது பிரசவ தினம் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் அவர்களது கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து 40 வாரங்களில் குழந்தையைப் பிரசவிப்பார்கள் எனினும் கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து இரண்டு வாரங்கள்வரை அவர்கள் கருவுற்றிருப்பதில்லை. உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும்போது அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே உங்களது கணவரது அல்லது பங்காளியினது விந்தினால் கருவுறச் செய்யப்படக்கூடிய இன்னொரு கருமுட்டையினை உங்கள் கருப்பை வெளியிட்டிருக்கும். எனவே உங்களது கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து இரண்டு வாரங்களில் இச்செயற்பாடு இடம்பெறுவதுடன் உங்களது கருத்தரிப்பின் முதல் வாரமானது உங்களது கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து உண்மையில் மூன்றாவது வாரமாகும். எனவே 40 வாரங்கள் கருவுற்றிருத்தலென நாம் பொதுவாகக் கூறினாலும் உங்களது குழந்தை 38 வாரங்களில் உருவாகிறது ஆனால் உங்களது கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து 40 வாரகாலத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கிறீர்கள். உங்களது கடைசி மாதவிடாய் காலத்திலிருந்து முதலாவது வாரத்தில் உண்மையில் ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. அது ஒரு சாதாரண வாரம் போன்றே இருக்கும். அப்போது நீங்கள் கருவுற்றிருப்பதில்லை. உங்களுக்கு மாதவிடாய் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன் மாதவிடாயின்போது உங்களிடம் தேங்கியிருந்த அசுத்த திரவத்தை வெளியேற்றி இருக்கிறீர்கள். சிலவேளை இதன் காரணமாக 0.5 – 1.0 கிலோ நிறையினை நீங்கள் இழந்திருக்கக்கூடும். ஒழுங்கான உடற்பயிற்சித் திட்டம் ஒன்று உங்களிடம் உள்ளது எனவும், ஆரோக்கியமான உணவினை உட்கொள்கிறீர்கள் எனவும், ஒழுங்கான தூக்கம் உங்களுக்கு ஏற்படுகிறது எனவும் நம்புகிறோம். குழந்தை ஒன்று உண்டாகியுள்ளது என்பது இவ்வேளையில் உங்களதும் உங்கள் காதலரதும் கண்களில் மின்னொளி துளிர்க்கின்றது.

வாரம் 2

உங்களது கருமுட்டைகள் அனைத்துக்குமான மூலவளம் உங்களது சூலகங்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் மாத விடாய் ஏற்படும் காலங்களுக்கிடையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருமுட்டைகளை சூலகங்கள் வெளியிடும். வெளியிடப்பட்ட கருமுட்டையானது 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரமே கருவுறும் தன்மை கொண்டது. நீங்கள் உடலுறவில் ஈடுபடுபட்டால் இவ்வேளையிலேயே நீங்கள் பெரும்பாலும் கருத்தரிக்க ஏதுவாகிறது.