Home > Tamil > பிள்ளைகளும் கலாச்சாரமும்

பிள்ளைகளும் கலாச்சாரமும்
பொறுப்புள்ள அத்துடன் பிறர் நலன் கருதுகின்ற வளர்ந்தோராக விளங்கத்தக்கதாக இளம் உள்ளங்களை வடிவமைக்கக்கூடியதாக இருப்பதே பெற்றோராக இருப்பதிலுள்ள மிகவழகான அம்சமாகும். பெற்றோரினது இப்பொறுப்பினை முழுவதுமாக நிறைவுசெய்வதற்கு, எமது கலாச்சாரம் பற்றிப் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்பித்தல் அவசியம்.

 கலாச்சாரம் என்பது யாது

 இலகுவாகக் கூறின், கலாச்சாரம் என்பது மக்களின் வாழ்க்கை முறையாகும். குறிப்பிட்டதொரு சமூகத்தின் பாரம்பரியங்கள் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை இது உள்ளடக்கும். ஆயிரமாயிரம் வருடங்களுக்கு மேலாக பல்வேறுபட்ட மதங்களினால் வடிவமைக்கப்பட்ட வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை இலங்கைவாசிகளாகிய நாம் கொண்டுள்ளோம்.

 கலாச்சாரத்தின் முக்கியத்துவம்

உலகத்திலுள்ள மற்றைய மக்களிடமிருந்து எம்மை வேறுபடுத்திக் காண்பதுடன் எம்மை தனித்துவமான இலங்கையர்களாக உருவாக்குவதும் கலாச்சாரமே. பலவிதமான கவர்ச்சிகளினாலும் செல்வாக்குகளினாலும் அடிக்கடி அடித்துச் செல்லப்படுபவர்கள் சிறுவர்களே, ஆயினும் இவற்றில் அநேகமானவை முக்கியத்துவமற்றவையும் பயனற்றவையுமாகும். ஆனாலும் பிள்ளையொன்று இளம் வயதினராக வளர்கையில் நல்லவற்றையும் கெட்டவற்றையும் வேறுபடுத்திப்பார்ப்பதற்கு கலாச்சாரமானது வளிகாட்டியாக அமைகிறது.  இதனிலும் மேலாக, எங்கள் பிள்ளைகளுக்கு நாம் கலாச்காரத்தினைப் பரிசாக வழங்கும்போது மாத்திரமே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு இது பரிவர்த்தனை செய்யப்படுவதுடன் இது பெற்றோரினது முக்கிய பொறுப்பாகவும் உள்ளது.

இலங்கையிலுள்ள கலாச்சாரத்துடன் உங்கள் பிள்ளைகளை இணைப்பது எவ்வாறு?

  • வீட்டில் பயன்படுத்தவும் – கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தினைக் கற்பிப்பதற்குரிய மிகச் சிறந்த இடமாக வீடு அமைகிறது. கலாச்சாரத்தின் பெறுமானத்தினையும் மற்றும் அதன் பயன்களையும் அத்துடன் நம் முன்னோர் வழங்கிய பொன் விதிகளையும் அவர்களுக்குக் கற்பிக்கவும். இது அனைத்தையும் ஏற்றுக்கொள்வதைப் பற்றியதல்ல ஆனால் பாரம்பரியமான விவேகத்தினை விளங்கிக் கொள்ளுதலாகும். அதன் பின்னர் எமது வாழ்க்கையிற் பிரயோகிக்கப்படத்தவை எவையென வடிகட்டிக் கொள்ளுதலாகும்.
  • சிந்தனையை உருவமைக்கவும் – இலங்கையர்களாகிய நாம் சிறப்பு வாய்ந்ததொரு கலாச்சாரத்தினைக் கொண்டுள்ளோம் என்பதனை உங்கள் பிள்ளைகளை அறியச்செய்யவும். எமது வாழ்க்கைக்கு அதிகளவு அர்த்தத்தினை வழங்குவதற்கு கலாச்சார நடைமுறைகளும் நம்பிக்கைகளும் உள்ளன என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவும்.
  • கலாச்சாரத்தினூடாகக் காணவும் – இளம் உள்ளங்கள் அறியும் ஆவலுள்ளவை. அவர்களுக்குப் போதிக்கப்பட்டவற்றைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதனைவிட பழக்கங்கள் மற்றும் மதச்சடங்குகளது அர்த்தத்தினை அறிந்துகொள்ள விரும்புவர். அவர்கள் என்ன செய்யவேண்டுமென்பதைக் கூறுவதை நிறுத்தவேண்டாம், அற்றிற்குப் பின்னேயுள்ள காரணங்களையும் வாதப்பொருத்தத்தினையும் விளக்குக.
  • பெருமைகொள்ளவும் – எமது வரலாற்றைக் கற்கும்படி உங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கவும். எமது முன்னோர்களால் அன்பளிக்கப்பட்ட ஆர்வத்தைத் தூண்டுகிற இலக்கியங்கள், ஜாதகக் கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் கதைகளை இயலுமானவரையில் தொடர்பு படுத்தவும். எமது பரம்பரைகள் பலவற்றுக்கு முன்னர் புவியில் வாழ்ந்த மக்களின் பாரம்பரிய அறிவினை மதிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கவும்.
  • மாற்றங்களுக்கு இடமளிக்கவும் – கலாச்சாரமென்பது கடந்த காலத்தின் ஒன்றல்ல என்பதுடன் ஒருபோதும் அப்படி அமையாது. கலாச்சாரம் என்பது இயங்கு விசையுள்ளதும், மாற்றமடையும் தன்மையுடையதுமாகும் என்பதே அதன் கவர்ச்சிகரமான அம்சமாகிறது. எனவே பாரம்பரியங்கள், சமூக விதிமுறைகள், விழுமியங்கள், மற்றும் நன்னெறிகள் அனைத்தும் வாழ்க்கையினதும் சமூகத்தினதும் தேவைகளுக்கு ஏற்றவாறு காலத்துக்குக் காலம் மாற்றம் அடைவனவாகும். எமக்கும் எம்மைச் சுற்றியுள்ளோருக்கும் பாதகமேற்படாதவரையில் மாற்றங்களாவன உயிரோட்டமான அத்துடன் பிரகாசமான கலாச்சாரத்தின் அறிகுறியாகும்.
  • சகபாடிகளுடன் பகிர்ந்துகொள்க – பாரம்பரியத்தினை முழுமையாகச் செயற்படுத்தம்போதே அதன் உண்மையான அழகு புலப்படுகிறது.

இலங்கையிலுள்ள கலாச்சாரம் பற்றி உங்களது பிள்ளைக்கக் கற்பிக்கையில் இயல்பான மற்றும் சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்க மறக்கவேண்டாம். தேவையேற்படும்போது எதிர்நீச்சல் போடுவதற்குரிய துணிவினை அவர்களுக்கு வழங்கவும்.

நாம் அனைவரும் கலாச்சாரத்தை உருவாக்குவோம். சிறந்த நன்மைக்காக அதனை மாற்றுவதற்குரிய ஜனநாயகம் எமக்கு உண்டு.

பெற்றோராக இருப்பதற்கு வாழ்த்துகிறோம் !

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.