Home > Tamil > நண்பர்களை உருவாக்கிக் கொள்வதற்கு உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவ முடியும்?

நண்பர்களை உருவாக்கிக் கொள்வதற்கு உங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவ முடியும்?




ஆறு வயது நிரம்பிய கார்த்திக் மிகுந்த கவலையுடன் தாயைப் பார்த்து கூறினான். “அம்மா பாடசாலையில் யாருக்கும் என்னைப் பிடிப்பதில்லை. எனக்கு ஒரு நண்பர்களும் இல்லை.” இதைக் கேட்ட தாய் ராணி மிகுந்த கவலை அடைந்தாள். ஆனால் அவள் கவலையைக் காட்டாதவாறு, “மகனே அப்படி இருக்காது. இன்று பாடசாலையில் என்ன நடந்தது?” எனக் கேட்டாள்.

“மகனே கவலைப் படாதே. அப்படிப்பட்ட நண்பர்கள் யாருக்குத் தேவை? நான் தான் உனது நண்பன்!” இப்படி அறிவு பூர்வமாகக் கூறும் தாய்மார்களும் இருக்கிறார்கள்.

ஆனால் ஒருபோதும் இவ்வாறு கூறாதீர்கள்!

உங்கள் குழந்தைக்கு உங்களது அன்பும் அரவணைப்பும் கட்டாயம் தேவை. அவ்வாறே அவர்களுக்கு நண்பர்களும் தேவை. பெற்றோர்கள் என்றவகையில் எமது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி சமுகத்துடன் இணைந்து நல்ல வாழ்க்கையொன்றை வாழ்வதற்கு அவர்களுக்கு நல்ல நண்பர்களும் தேவை.

கார்த்திக்கின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவனது தாயார் சில சாதகமான முடிவுகளை எடுத்தாள். சில இலகுவான வழிமுறைகளையும் சில அறிவுரைகளையும் கார்த்திக்கிற்கு வழங்கினாள். இன்று கார்த்திக், வீட்டில் உள்ளவர்களைப் போலவே வெளியில் உள்ள நண்பர்களாலும் பெரியவர்களாலும்  அதிகம்  விரும்பப் படுகின்ற ஒருவனாக மாறியுள்ளான்.

உங்கள் குழந்தையின் நம்பிக்கையையும் சமூக திறன்களையும் கட்டி எழுப்புவது எப்படி?

  • சமூகமயமாவதற்கு தேவையான வாய்ப்புகளை அளித்தல்–உங்கள் குழந்தை சமூகத்தோடு ஈடுபாடு காட்டுவதற்கும், சமூகத் திறந்களைவளர்த்துக் கொள்வதற்கும் கற்றுக் கொடுங்கள். அதற்குத் தேவையான சரியான பின்புலத்தை உருவாக்கிக் கொடுங்கள்.
  • விளையாடுவதற்கான நேரத்தை அமைத்துக் கொடுங்கள்– மற்றைய குழந்தைகளுடன் விளையாடத்தக்க இடங்களை தெரிவு செய்து கொடுங்கள். அல்லது அவர்களது நண்பர்களை அவர்களது தாய்மாரோடு உங்கள் வீட்டிற்கு அழையுங்கள். அவர்கள் தாமாகவே விளையாட அனுமதியுங்கள். அவர்கள் எவ்வாறு நண்பர்களுடன் விளையாட வேண்டும் என்பது பற்றி தலையிடாதிருங்கள். அவர்கள் தாமாகவே சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பளியுங்கள். உங்கள் குழந்தைகளை கடைகளுக்கு, வங்கிகளுக்கு, சந்தைக்குச் செல்லும்போது அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் மற்ற மனிதர்களுடனும் இணங்கிப் பழகுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுக் கொடுங்கள்.
  • நட்புக்கு உதவுங்கள்– உங்கள் குழந்தை பாடசாளையில் நடந்தவைகளைப் பற்றிக் கூறும் போது அதற்கு செவிகொடுங்கள். கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் குழந்தை மற்ற குழந்தைகளுடன் எவ்வாறு சமூகமயமானது என்பதைக் கண்டறியுங்கள். உங்கள் குழந்தைகளின் நண்பர்களை அறிந்து கொண்டு அவர்களது நட்புறவை வளர்க்க ஊக்கமளியுங்கள்.உங்கள் குழந்தைகளின்கலந்துரையாடல்களில் இருந்து அவர்களது நண்பர்கள் யாவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எத்தகைய சந்தர்ப்பத்திலும் ஆரோக்கியமான நட்பை வளர்ப்பதற்கு உதவி செய்யுங்கள். அதற்காக ஒன்று கூடல்கள் அல்லது சுற்றுலாக்களை ஒழுங்கு செய்யுங்கள்.
  • எப்போதும் சமநிலைத் தன்மையாக நடந்து கொள்ளுங்கள்– உங்கள் குழந்தை யாரேனும் ஒரு நண்பனது எதிர்ப்புக்கு உள்ளாகலாம். அல்லது நண்பர் இல்லையே என்ற கவலையில் வீட்டிற்கு வரலாம். எப்போதும் அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். அவர்களுக்கு அனுதாபம் காட்டுங்கள். ஆனால் தாய் என்ற வகையில் உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து நீங்களும் அவர்களுக்கு ஏசாதீர்கள். உங்களது பிள்ளைக்கு, அவரது கோரிக்கைக்கு நண்பர் உடனடியாக இணங்காவிடில் அல்லது ஏற்றுக் கொள்ளாவிடில் அவர்களை எதிர்க்கும் நிலைமை அல்லது அவர்களை நிராகரிக்கும் நிலைமை ஏற்படாது. மேலும் பக்கச் சார்பின்றியும் நடந்து கொள்ளுங்கள். என்ன நடந்தது என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவரது நண்பர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை உங்கள் குழந்தை தெரிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் குழந்தையிடம் உள்ள குறைபாடுகளை இனங்காணச் செய்யுங்கள். நண்பர்களை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதைக் காட்டிக் கொடுங்கள். இயலுமானால் அவர்களது தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் வாயிலாக அறிவுரைகளைப் பெற்றுக் கொடுங்கள்.
  • முன்மாதிரிகையாக விளங்குங்கள்– உங்கள் குழந்தை சமூகமயமாக வேண்டுமென்றால் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரிகையாக இருக்க வேண்டும். ஏனென்றால் பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பார்த்தே அனைத்தையும் கற்றுக் கொள்ளுகிறார்கள்.

கீழே உள்ள சில டிப்ஸ்களை முயன்று பாருங்களேன்:

  • நகைச்சுவை உணர்வு இருத்தல் வேண்டும்.
  • உங்களது பலவீனங்களை அறிந்து கொள்ளுதல், ஏற்றுக் கொள்ளுதல்.
  • மற்றவர்களை விமர்சிக்காதீர்கள்.
  • நட்புடன் இருங்கள், சமூகத்துடன் ஒன்றிப் போதல், உங்களுக்குத் தெரிந்த மனிதர்களுடன் உறவாக இருத்தல்.
  • கருணையும் புரிந்துணர்வும் மிக்கவர்களாக இருங்கள்.
  • முறைப்பாடு செய்யாதீர்கள். உங்கள் குழந்தையின் இலக்கு யாது என்பதையும் அதனை எவ்வாறு அடைந்து கொள்வது என்பதையும் காட்டுங்கள்.
  • உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையைக் கட்டி எழுப்புங்கள்.
  • ஒவ்வொரு குழந்தையும் தான் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு நண்பர்கள் தேவை. நமது குழந்தைகள் சிறப்பானதொரு வாழ்க்கையைக் கட்டி எழுப்புவதற்கு நாம் உதவி செய்வோம்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.

error: Content Protected © mummypages.lk