Home > Tamil > தொடக்கநிலை வயதுடைய பிள்ளைகளுக்கான பழங்களும் காய்கறிகளும்

தொடக்கநிலை வயதுடைய பிள்ளைகளுக்கான பழங்களும் காய்கறிகளும்
தொடக்கநிலை வயதுடைய பிள்ளைகள் பழங்கள் மற்றும் காய்கறிகளினால் எந்தளவு பயனைப் பெறுகிறார்கள்? பழங்களும் காய்கறிகளும் தேவையான அளவுக்கு உட்கொள்ளும்போது வளரும் சிறுவர்களுக்குப் பின்வருவற்றுக்கு உதவுகின்றன.

  • அதிகரித்த போசாக்கு
  • மட்டுமீறிய உடற்பருமனைத் தடுத்தல்
  • பாடசாலையில் உயர்வான செயற்பாடு

இலங்கையில் உள்ள சிறுவர்கள் எப்போதும் தேவையான அளவு பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வதில்லை. சமநிலையான போசாக்கிற்கு பழங்களும் காய்கறிகளும் உணவின் மூன்றிலொரு பங்களவுக்கு அமைந்திருத்தல் வேண்டும்.

உணவிலுள்ள போசாக்குப் பெறுமானத்தை பாதுகாப்பதற்கு அநேகமான பழங்களும் காய்கறிகளும் அப்படியே இயற்கைநிலையில் உட்கொள்ளப்படலாம்.

பழங்களிலும் காய்கறிகளிலும் கிடைக்கும் அதிகரித்த போசாக்கு

ஆரம்ப வயதுப் பிள்ளைகளது வளர்ச்சிக்கும் உளச்சார்பு விருத்திக்கும் மேலதிகப் போசாக்கு தேவைப்படுகிறது. வெப்பமண்டல நாடாக அமைந்துள்ள இலங்கையில் பெருமளவு போசாக்குப் பெறுமானங்களை வழங்குகின்ற வானவில் வண்ணந் தோய்ந்தது போன்ற பலவகையான பழங்களும் காய்கறிகளும் கிடைக்கின்றன.

  • சிற்ரஸ் பழங்கள். உயிர்ச்சத்து சி நிறைந்த தோடை, நாரத்தை போன்ற பழச்சாறுகள். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன
  • உயிர்ச்சத்து ஏ, கரட் சிறந்ததொரு மூலமாகும். சிறந்த சருமத்திற்கும் கண்பார்வைக்கும் உயிர்ச்சத்து ஏ பயனுள்ளதாகும்
  • நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இலைக்கறிவகைகள் இரும்புச்சத்து, தாதுப்புக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும்.
  • பப்பாளி, மாம்பழம், பெலி ஆகிய பழங்கள் உடலில் நீர்வற்றிப்போதலை தடுத்து சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கும் வகையினைச் சேர்ந்தவை
  • கெக்கரிக்காய் மற்றும் வத்தகப்பழம் ஆகியவை கோடை காலத்தில் குளிர்ச்சியைக் கொடுப்பனவும் அத்துடன் அதிகளவு உயிர்ச்சத்துக்களைக் கொண்டனவாகும்

எளிதாகக் கூறுவதாயின், ஒவ்வொன்றும் விசேடமான உயிர்ச்சத்துக்களைக் கொண்ட பல்வேறு வகையான பழங்களை உங்களது பிள்ளை உட்கொள்வதை உறுதிசெய்துகொள்க.

சிறுபிள்ளைகளுக்கு அதிக உடற்பருமன் ஏற்படுவது குறைவுறல்

பழங்களும் காய்கறிகளும் அதியுயர் அளவு நார்ச்சத்தினை கொண்டுள்ளவை ஆனால் கொழுப்பு, சர்க்கரைகள் மற்றும் மாப்பொருட்களை அதிகுறைந்தளவே கொண்டவையாகும். இனிப்பான சிற்றுண்டிகளுக்கு மாற்றீடாக பழங்களைக் கொடுப்பதன் மூலம் சிறுவர்களுக்கு 2வது வகை நீரிழிவு நோய் ஏற்படாது பாதுகாக்கலாம். அவர்களுக்குப் பசியேற்படும்போது கொடுப்பதற்குச் சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட பப்பாளி அல்லது மாம்பழத்தினை குளிர்பதனப்பெட்டியில் இட்டு வைத்திருக்கலாம். சிறுபசி ஏற்படும் வேளையில் சிற்றுண்டியாக வழங்குவதற்கு ஆப்பிள் அல்லது மண்டரின் பழங்களை வைத்திருக்கலாம்.

பழங்களும் காய்கறிகளும் உண்ணும் பிள்ளைகளின் வயிறு நிறைவதுடன்  கொழுப்பு மற்றும் சர்க்கரைகள் அற்று ஆரோக்கியத்தைப் பெருக்குகிறது. பல்வேறு வகை மற்றும் சுவைக்காக சிறிதளவு மயோனெஸ்  (mayonnaise) (http://en.wikipedia.org/wiki/Mayonnaise) அல்லது விதைகள் கலந்த காய்கறிக் கலவையை தெரிவுசெய்க. சிறுதுண்டுகளாக நறுக்கப்பட்ட கெக்கரிக்காயை பிள்ளைகள் விரும்புவார்கள். அதனை நீங்கள் எளிதாக அவர்களுக்கு அறிமுகம் செய்தல் வேண்டும்.

பழங்களையும் காய்கறிகளையும் நிறைந்தளவு கொண்ட ஆரோக்கியமான உணவுகளை இளம் வயதில் பிள்ளைகள் மனத்தில் ஆழப்பதியவைத்தலானது வளர்ந்தோரைப் போன்று அவர்களும் ஆரோக்கியமான உணவுகளை உண்பதனை உறுதிசெய்கிறது. இதன்மூலம் கொலஸ்ட்ரோல்
(cholesterol http://en.wikipedia.org/wiki/Cholesterol) சுவாசம் தொடர்பான பிரச்சினைகள், அளவுக்கு மீறிய இரத்த அழுத்தம் (hypertension http://en.wikipedia.org/wiki/Hypertension) மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

சிறந்த செரிமானம்

இளம் பிள்ளைகளுக்கு மலச்சிக்கல் (constipation – http://en.wikipedia.org/wiki/Constipation) ஏற்படும்போது அவர்கள் பெரும் அவதியுறுகின்றனர். பப்பாளிப்பழம், பீன்ஸ், ப்ரோகோலி (broccoli), பசளிக்கீரை, மாம்பழம், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்ற பழங்களும் காய்கறிகளும் சிறந்த செரிமானத்திற்கு உதவுகின்றன. நார்ச்சத்தானது நீரை உறுஞ்சி அத்துடன் குடலினுள் அசைவினைத் தூண்டி மலச்சிக்கல் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கிறது.

அதிகரித்த பாடசாலைச் செயற்பாடு

பழங்களையும் காய்கறிகளையும் அதிகளவு உட்கொண்ட பிள்ளைகள் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை பிள்ளைகளிடத்தி்ல் மேற்கொண்ட பரிசோதனைகள் காட்டுகின்றன.

இலங்கையிலுள்ள  பழங்களும் காய்கறிகளும் சிறுவர்களுக்கான போசாக்கினைக் நிறைவாகக் கொண்டுள்ளன என்பதை ஞாபகத்தில் வைத்தி்ருங்கள். விசேடமாகப் பழங்கள் பிள்ளைகளது சக்தி மட்டத்தினை அதிகரித்து அத்துடன் அவர்கள் பாடசாலையில் அவதானமாக இருக்கத்தக்கதாக நீர்த்தன்மையை வழங்குகின்றன. உங்களது பிள்ளையின் உணவுடன் தினந்தோறும் பழங்கள் கொண்ட சிற்றுண்டியினையும் விருந்தாகச் சேர்த்து வழங்குக.

ஆர்வத்தை உண்டாக்கவும்

சிறுவர்களைக் காய்கறிகளை உண்ணச்செய்வது எவ்வளவு கடினம் என்பதனை நாம் எல்லோரும் அறிவோம். பிள்ளைக்குக் காய்கறிகளை உணவாக ஊட்டுவதற்குரிய மாற்று வழிகளை அறிவதன் மூலம் இதனை ஓரளவுக்குத் தவிர்க்கவும்.  மயோனெஸ்சில் (dipped in mayonnaise) அமிழ்த்தி எடுக்கப்பட்ட லெற்றூஸ் (leafy lettuce) கீரை இலைகள் சிலவற்றையும் காரட் சீவல்களையும் கொண்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட பர்கர் (home-made burger) வழங்கலாம்.

பிள்ளையை உங்களுன் அழைத்துச்சென்று அவன் அல்லது அவள் விரும்பும் பழங்களைத் தேரிவு செய்வதற்கு ஊக்குவிக்கவும். பழக்கலவை ஒன்றினைச் செய்வதற்கு உதவுமாறு பிள்ளையைிடம் கூறி இன்றே தொடங்கவும்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.