Home > Tamil > தாய்மார்கள் கோபத்தை அடக்க வேண்டியதன் அவசியம்

தாய்மார்கள் கோபத்தை அடக்க வேண்டியதன் அவசியம்
நிர்மலி தனது குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பதற்கு கடுமையாக முயற்சி செய்தார். அது அவருக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. அவர் வீட்டுக்கு வருகிற போது மிகவும் களைப்படைந்து இருப்பார். இடைவிடாது குறும்பு செய்து கொண்டிருக்கும் சிறு குழந்தை, எப்போதும் பிடிவாத குணம் கொண்ட ஒன்பது வயது மகன் மற்றும் பருவ வயதில் ஒரு மகள். மிகவும் அழுத்தம் மிக்க சந்தர்ப்பங்களில் நிர்மலி தனது கணவன் மீதும் கோபப்படுவாள். தனக்குத்தானே புலம்பிக் கொள்வாள். அத்துடன் கதவை வேகமாக சாத்துவாள். தன்னைச் சுற்றியுள்ள பொருட்களை வீசி எறிவாள். சில சந்தர்ப்பங்களில் தனது பிள்ளைகளின் கன்னத்தில் அறைவாள். ஒவ்வொரு முறையும் இவ்வாறு சீறிப் பாய்ந்த பின்னர் நடந்த விடயங்களை எண்ணி மனம் வருந்துவாள். அதன் பினர் தனது கோபத்தினை அடக்குவதற்கு அதிக பிரயத்தனம் எடுத்துக் கொள்வாள்.

சாந்த குணமிக்க தாய்மார்கள் கூட மிகுந்த அழுத்தம் மிக்க சந்தர்ப்பங்களில் கோபம் கொண்டு இவ்வாறு சீறிப் பாய்கிறார்கள். எவ்வாறாயினும் நாம் இதனை ஆழமாக கவனித்தால், தனது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தனது கோபத்தினை தனது பிள்ளைகளின் மேல் காட்டுகிறாள். இவ்வாறு இவர்கள் செய்வதனால் ஒரு பிரயோசனமும் கிடையாது. கட்டுப்பாட்டை மீறி கோபத்துடன் சீறிப் பாய்கின்ற போது குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான உறவில் விரிசல் ஏற்படுகின்றது. அத்துடன் உங்களது குழந்தைகளின் வாழ்க்கை, உணர்வு ரீதியாகப் பாதிப்படைகின்றது. உங்களது கட்டுக்கடங்காத கோபமானது இரண்டு விதமான பதாக விளைவுகளை ஏற்படுத்துகின்றது. அதாவது நீங்களும் உங்கள் குழந்தைகளும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றீர்கள்.

பின்வரும் ஆறு துணுக்குகள் தாய்மார்களின் மோசமான கோபத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவியாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் இருக்கும்.

  1. நீங்கள் கோபமடைவதற்கான காரணத்தை அடையாளம் காணுங்கள்.

கோபத்தை கட்டுப்படுத்துவற்கான முதற்படியாக நீங்கள் கோபம் அடைவதற்கான காரணத்தை கண்டறியுங்கள். அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய அத்தகைய கட்டுக்கடங்காத கோபம் நீங்கள் பகுத்தறிவு மிக்க தீர்மானங்களை எடுப்பதைத் தடை செய்கின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் நீங்கள் ‘அமைதியாக இருத்தல்’ என்னும் உபாயத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

  1. அமைதியாக இருத்தல்

மெதுவாக பத்து வரை எண்ணுங்கள். பின்னர் ஆழமான சுவாசத்தை உள்ளெடுத்து மெதுவாக வெளிவிடுங்கள், அமைதியான இசையை கேளுங்கள், சிறிது தூரம் மெதுவாக நடந்து செல்லுங்கள். அல்லது உங்களது நண்பர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் உறவாடுங்கள். அல்லது உங்களுக்கு அமைதி தரக்கூடிய, மகிழ்ச்சி தரக்கூடிய செயற்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். பின்னர் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள். நீங்கள் கோபப்பட்டதற்கான கரணம் யாது என நீங்கள் அறிந்து கொள்வீர்கள். கோபத்திற்கான காரணம் நீங்கள் அதிகம் களைப்படைந்ததினாலா?  வேலைப்பளுவின் காரணமாக நீங்கள் விரக்தி அடைந்தீர்களா? கடுமையான சிந்தனை காரணமாகவா? அல்லது உங்கள் குழந்தைகளின் செய்கைகள் அல்லது பேச்சின் காரணமாகவா?

  1. உங்கள் உணர்வுகளுக்கான விளக்கமும் மாற்று நடவடிக்கைக்கான ஆலோசனைகளும்.

உங்கள் குழந்தைகளின் செயற்பாடுகளும் பேச்சுகளும் உங்களுடைய கோபத்திற்குக் காரணமாக அமையுமாயின் உங்கள் குழந்தைகளுக்கு அதைப்பற்றி விளங்கப்படுத்துங்கள். உங்களது மகனுக்கோ மகளுக்கோ நீங்கள் கோபம் கொண்டதற்கான காரணத்தை விளங்கப்படுத்துங்கள். அத்துடன் நீங்கள் மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்புவதற்கு உங்களது பிள்ளைகள் என்ன விதமான மாற்று நடைவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதனையும் குறிப்பிட்டுக் கூறுங்கள்.

  1. கடுமையான சொற்களாலோ உடல் ரீத்யாகவோ உங்கள் பிள்ளைகளை ஒருபோதும் புண்படுத்தாதீர்கள்.

கடுமையான சொற்பிரயோகம், பயமுறுத்தல், அவமானப்படுத்தல் அல்லது சொற்களாலோ, உடலாலோ புண்படுத்தல் என்பவற்றை குழந்தைகள் மீது எவ்வகையிலும் மேற்கொள்ளாதீர்கள். இத்தகைய செயல்கள் உங்கள் குழந்தைகளை நிரந்தரப் பாதிப்பிற்கு உள்ளாக்கும். குழந்தைகளை நல்வழிப்படுத்துவற்கு நல்ல ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவைப்படுகின்றது. அடித்தல் மற்றும் கடுமையான சொற்பிரயோகங்கள் என்பன குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒருபோதும் உதவாது.

  1. இருவரும் ஒரே நேரத்தில் கோபம் கொள்ளாதீர்கள்.

சில நேரங்களில் உங்கள் குழந்தைகள் கோபமாகவும் மூர்க்கத்தனமாகமாகவும் நடந்துகொள்ள முற்படுவார்கள். அவ்வேளையில் நீங்கள் அமைதி காத்து புத்திசாதுரியமாக சிந்தித்து அவர்களின் கோபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை கண்டு அவர்களை சாந்தப்படுத்த முயல வேண்டும்.

  1. உதவியை நாடுதல்.

இலங்கையிலுள்ள பெரும்பாலான தாய்மார்கள் வேலை நேரங்களின் போது பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். நீங்கள் ஒரு தாய். நீங்கள் ஒரு ஹீரோ அல்ல. எல்லாவற்றையும் உங்களால் தனித்து செய்ய முடியாது. உங்களது மிதமிஞ்சிய வேலைப்பளுவின் காரணமாக உங்களுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகின்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.. அவ்வேளைகளில் நீங்கள் உங்களது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின், நண்பர்களின் உதவியைக் கேளுங்கள். நீங்கள் அடிக்கடி மன அழுத்தம், விரக்தி, கோபத்திற்கு ஆளாகின்றவராயின் ஒரு  நம்பிக்கையான நபரிடமிருந்து ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

கோபம் என்பது மனித இயல்பு. தாய்மார்களும் மனிதர்களே. எனினும்  பிள்ளைகள் தங்களது தாய்மார்களையே முன்மாதிரிகளாக கொள்வார்கள். இவ்வகையில் தாய்மார்கள் தங்களது கோபத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியமானது. உங்களுடைய செயற்பாடுகள் தான் உங்கள் குழந்தைகள் வளர்ந்த பின்னர் அவர்கள் எவ்வாறு கோபத்தைக் கட்டுப்படுத்துவார்கள் என்பதைத் தீர்மானிக்கும்.

அதனால் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி இன்றே வேலையை ஆரம்பியுங்கள்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.