Home > Tamil > சோம்பேறித்தனமான உங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி?

சோம்பேறித்தனமான உங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவது எப்படி?




அன்றாட பாட வேளைகளில் ஊக்கமின்றி, சிறந்த புள்ளிகளைப் பெறாத   பிள்ளைகளை பல பெற்றோர்கள் ஊக்குவிக்கத் தவறி விடுகிறார்கள்.

உங்கள் பிள்ளைகளப் புரிந்து கொள்ளுங்கள்

இதை நாம் உன்னிப்பாக நோக்கின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளில் கொண்டுள்ள கட்டுப்பாட்டு அதிகாரத்தை முறியடிக்கின்ற ஒரு போராட்டம்தான் இந்த சோம்பேறித்தனமாகும். தங்கள் பெற்றோர்களைக் காக்க வைத்தல் மற்றும் கீழ்படியாமை, தவிர்த்து விடுதல் என்பவற்றின் மூலம் பிள்ளைகள் பெற்றோர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளும் அதிகாரத்திற்குள்ளும் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.

சோம்பேறித்தனமான ஊக்கப்படுத்த முடியாத பிள்ளைகளைக் கையாள்வது எப்படி?

  • ஒரு கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்காதீர்கள் சில பிள்ளைகள் தங்களை பெற்றோர்கள் ஒரு வேலையைச் செய்வதற்குப் பல முறை கோருவது அவர்களுக்குத் தெரியும். அந்த வேலை முக்கியமானது என தெரிந்திருந்தும் அவர்கள் ஏன் அவற்றை ஒரு தரம் சொன்னால் செய்வதில்லை. இத்தகைய பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட முயற்சி எடுங்கள். ஒரு வேலையை ஒரு தடவை மட்டும் கூறுங்கள். “நான்” என்ற சொல்லைப் பாவியுங்கள். உதாரணமாக ‘நான் இப்ப உன்னை எழும்பச் சொல்லி சொன்னேன்’ என்று கூறி விட்டுச் செல்லுங்கள். இது நடக்கவிட்டால் பல விளைவுகள் ஏற்படக் கூடும்.
  • பொய்யான பயமுறுத்தல்களைச் செய்யாதீர்கள் கீழ்ப்படியாவிட்டால் டீவீ பார்க்க முடியாது என நீங்கள் கூறினால் அவ்வாறே செய்யுங்கள். ஏதாவது ஒன்றைச் செய்யச் சொல்லி அதைச் செய்யாது விட்டால் ஏதாவது ஒரு பொருத்தமான தண்டனையைக் கொடுங்கள். டிவி பார்க்க முடியாது, கம்ப்யூட்டர் பார்க்க முடியாது. முறையான தண்டனைகள் வழங்கப்படுதல் வேண்டும். உங்கள் பிள்ளைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காதீர்கள்.
  • பாராட்டுதல்கள் நல்ல நடத்தைகளையும் நல்ல பெறுபேறுகளையும் காட்டும் போது பாராட்டுங்கள். உங்கள் பிள்ளை ஒரு ‘A’ பெறுபேற்றைப் பெற்று பரிசு பெற்றால் மற்ற F களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இது உங்கள் குழந்தைகள் மென்மேலும் பாராட்டுதல்களைப் பெறத் தூண்டும். உங்கள் குழந்தை வீட்டு வேலைகளைச் செய்யாது விடும்போது அதற்கான பொறுப்பை அவர்களை எடுக்கச் செய்யுங்கள். ‘நீ செய்யாவிட்டால் பெயில் ஆவாய். நீ நன்றாக செய்தால் நான் உனக்குப் பரிசு தருவேன்.’
  • உங்கள் பிள்ளைகளுடன் நேரத்தைச் செவழியுங்கள் – உங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிட முயற்சி எடுங்கள். நீங்கள் வேலைக்குப் போகும் பெற்றோராக இருந்தால் வாரத்தில் ஒரு நாளாவது நேரத்தோடு வீட்டிற்கு வாருங்கள். உங்கள் குழந்தைகளை விளையாட்டு மற்றும் நீச்சல் போன்ற உடற்பயிற்ச்சிகளில் ஈடுபடுத்துவதன் மூலம் டிவி, கம்ப்யூட்டர் போன்ற விளையாட்டுக்களில் இருந்து தவிர்க்கலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் பொழுதைக் கழிக்கப் போதுமான பார்க்குகள் இலங்கையில் பெருமளவில் காணப்படுகின்றன.
  • வற்புறுத்தாதீர்கள் – உங்கள் சோம்பேறிப் பிள்ளையைப் பார்த்து கத்திக் கூச்சலிட்டு வற்புறுத்தாதீர்கள். உண்மையிலேயே பிள்ளைகள் சோம்பேறிகள் அல்லர். அவர்கள் வெறுமனே தங்கள் பெற்றோர்களிடம் அதிகாரத்தைக் காட்டுவதற்கும் எரிச்சலூட்டுவதற்குமே முனைகிறார்கள். அப்போது உறுதியுடன் இருக்க வேண்டியதுடன் கட்டுப்பாட்டையும் மீறாதீர்கள். கத்தாதீர்கள். ஆனால் பொருத்தமான தண்டனைகளை வழங்குங்கள்.
  • ஊக்கப்படுத்துங்கள் – உங்கள் குழந்தைகளை மட்டந்தட்டி ஏளனம் செய்யாதீர்கள். நீங்கள் அவர்களில் எவ்வளவு அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதை உணரச் செய்யுங்கள். வீட்டு வேலைகளை ஏன் காட்டாயமாகச் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துங்கள். அவர்களது குறிக்கோள்களைப் பற்றிக் கதையுங்கள். அவர்கள் அடைய வேண்டிய இலக்குகள் பற்றிக் கதையுங்கள்.
  • கால அட்டவணை – வீட்டு வேலைகளைப் பி.ப.5.௦௦ மணிக்குச் செய்ய வேண்டும் என நியமித்திருந்தால் அந்த நேரத்தில் வேறு எந்த வேலைகளையும் செய்யாதீர்கள். 5.௦௦ மணிக்கு வீட்டு வேலை செய்யாதபோது அந்த நேரத்தில் வேறு வேலைகளைச் செய்ய அனுமதிக்காதீர்கள். உறுதியாக இருந்து ஒரு கால அட்டவணையின் அடிப்படையில் வேலைகளைச் செய்யப் பழக்குங்கள்.

எனினும் ஒவ்வொரு பிள்ளைகளும் பொறுமையாகவும் அன்பாகவும் கையாளப் பட வேண்டியவர்கள்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.

error: Content Protected © mummypages.lk