Home > Tamil > குழந்தைகள் குழப்படி செய்யும் வயது

குழந்தைகள் குழப்படி செய்யும் வயது

குழந்தைகள் குழப்படி செய்யும் வயது

 குழந்தைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே வருகிறார்கள். அவர்களது வளர்ச்சியைத் தடை செய்ய முடியாது. அனைவரும் கூறுவதைப் போல் குழந்தைகள் இரண்டு வயதை அடையும்போது அவர்கள் அதிக குழப்பம் விளைவிப்பவர்களாக இருப்பார்களா? உங்களது இரண்டு வயது நிரம்பிய குழந்தை செய்யும் குழப்படியை நீங்கள் எப்படி சமாளிக்கின்றீர்கள்? எவ்வாறு நீங்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்கின்றீர்கள்? அவ்வாறான சந்தர்ப்பங்களை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றீர்கள் என்பதிலேயே அது தங்கியுள்ளது.

சில பெற்றோர்கள் தமது குழந்தைக்கு இரண்டு வயதாகின்றது எனும்போதே மிகுந்த சஞ்சலத்திற்குள்ளாகி விடுகின்றனர். குழந்தைகள் இரண்டு வயதை அடையும் போதே அல்லது அதற்கு முன்னரே பரிணாம வளர்ச்சியடைய அதாவது வளரத் தொடங்கி விடுகின்றனர். சிறு குழந்தைகள் வளர்ச்சியடையத் தொடங்கும் போது, எல்லா விடயங்களிலும் எதிர்மாறான துலங்கலையே காட்டத் தொடங்குவர். நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் “இல்லை” என்று பதில் கூறுவதற்கு காரணம், அடிக்கடி அவர்களது மனநிலையில் ஏற்படும் மாற்றங்களாகும். அப்போது எந்தவித கவனமுமின்றி அனாவசியமான முறையில் அதிகளவாகக் கோபம் கொள்ளவும் தொடங்குவர்.

எனினும், இந்த இரண்டு வயதுப் பருவத்தில் குழந்தைகள் வேண்டுமென்றே கோபப்படுகிறார்கள் அல்லது பிடிவாதம் பிடிக்கத் தொடங்குகிறார்கள் என பெற்றோர்கள் நினைத்துவிடக் கூடாது. ஆனால் இது அவர்கள் தமது சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறையாக காணப்படுவதுடன் தமது எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தத்தக்க சொற்களை அவர்கள் இன்னமும் கற்றுக் கொண்டிராத நிலையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகள் எப்போதும் விரக்தி நிலையில் காணப்படுவார்கள் என்பதுடன் அவர்கள் எதிர்பார்க்கின்ற விடயம் நிறைவேறாமல் போகும்போது, அவர்கள் மற்றவர்களை அடிப்பதற்கும், கிள்ளுவதற்கும், கடிப்பதற்கும், நிலத்தில் விழுந்து உருளுவதற்கும், சத்தமிட்டு அழவும் தொடங்குவர். சில வேளைகளில் அவர்கள் கேட்கும் பொருள் அவர்களுக்குக் கிடைக்காத சந்தர்ப்பத்தில், நீங்கள் எதிர்பாராத விதமாக பொது இடங்களில் கூட இவ்வாறு செயற்படத் தொடங்குவர்.

பெற்றோர் குழந்தைகளது இத்தகைய வளர்ச்சி செயன்முறை தொடங்கும் சந்தர்ப்பத்தில், அவர்களை நன்றாகப் புரிந்து கொண்டு அவர்கள் இவ்வாறு செய்வதற்கு இடமளிக்காதீர்கள்.

அதற்கான வழிமுறைகள் சில இங்கே காட்டப்படுகின்றன.

  • அன்றாடக் கடமைகளை முறையாகச் செய்யுங்கள் – குளித்தல், உணவருந்துதல், விளையாடுதல், நித்திரைக்குச் செல்லுதல் போன்ற அன்றாடச் செயற்பாடுகளுக்கு உரியவாறு முறையாக நேரத்தை ஒதுக்குங்கள்.
  • உணவு உண்ணுதல் மற்றும் விளையாடுதல் என்பவற்றின்போது சில தீர்மானங்களை எடுப்பதற்கு குரிப்பிட்டளவு சுதந்திரம் அளியுங்கள். –

இதன் மூலம் பிள்ளைக்கு சில தீர்மானங்களை எடுப்பதற்கு குறிப்பிட்டளவு இடமளிக்கவேண்டியதுடன், சில விடயங்களில் அவர்களுக்கு உரிமை இருந்தாலும், அப்போது அவர்களுக்கு வேறு மாற்று வழிமுறைகளை எடுக்க முடியாதிருக்கும்.

  • சில விடயங்களை வரையறை செய்யுங்கள் –எனினும், அவர்கள் அவ்வரையறைகளை பரீட்சித்துப் பார்க்க முயற்சிக்கும்போது அது தொடர்பில் ஆச்சரியப்படாதீர்கள். ஒரேயொரு குழந்தை இருக்கும் குடும்பங்களில் இவ்வாறு வரையறை செய்தல் சிறிது கடினமான காரியமாக இருக்கலாம். எனினும், இது அவர்களது எதிர்கால வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கவும் கூடும்.
  • எதிர்பாராதவிதமாக அவர்கள் கோபப்படுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தாதீர்கள்குழந்தைகள் வெளியில் செல்லுவதற்கு, விளையாடுவதற்கு, மற்றும் அவர்களது ஏனைய தேவைகளுக்கு இடம் கொடுத்து அவர்கள் சிறந்த நடத்தையுடைவர்களாய் இருப்பதற்கான சூழலை உருவாக்கிக் கொடுங்கள்.
  • குழந்தைகள் விளையாடுவதற்கேற்ற பாதுகாப்பான இடங்களை செய்து கொடுங்கள் – பிள்ளைகள் பரிணாம வளர்ச்சியடையும் முக்கிய பருவமான இத்தகைய குழப்படியான பருவத்தில் பெற்றோர் அவர்களை நேர்மறையான கண்ணோட்டத்துடன் நோக்குவதற்கு/அணுகுவதற்கு முயற்சி எடுத்தல் வேண்டும்.
  • இரண்டு வயது குழந்தைகளைப் பார்க்கும் போது, அவர்களுக்கும் வளர்ந்த குழந்தைகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை பெற்றோர் விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.
  • வளர்ந்த பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது குழந்தைகள் இவ்வயதில் வழிதவறிச் சென்றவர்கள் போல் செயற்படுவர்.
  • குழந்தைகள் குழப்படி செய்ய முற்படும் போது, அத்தகைய சந்தர்ப்பங்களை சரிசெய்வதற்காக, குழந்தைகள் விரும்புகின்ற விளையாட்டுப் பொருட்களை அல்லது அவர்கள் சாப்பிட விரும்பும் உணவினை எப்போதும் அருகில் வைத்திருப்பது பொருத்தமானதாகும்.
  • குழந்தைகளது இந்த வளர்ச்சிப் பருவம் தொடர்பில் ஏனைய பெற்றோரும் அறிந்து வைத்திருப்பதால், இவ்வாறான பிரச்ச்சினைகளில் நீங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக மட்டும் என்ன வேண்டாம்.

நீங்கள் இது தொடர்பாக நினைக்கத் தொடங்கு முன்னரே, இந்த குழப்படியான பருவம் குழந்தைகளிடமிருந்து மறைந்து போய்விடும். இத்தகைய சந்தர்ப்பங்கள் வாழ்நாள் முழுவதும் தொடராது. ஆகவே, குழந்தைகளது இவ்வாறான குழப்படியான பருவத்தில் அவர்கள் செய்யும் குறும்புகளையும் கொஞ்சம் ரசிக்க முயற்சி எடுங்கள்!

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.