Home > Tamil > குழந்தைகளது சருமத்தை எவ்வாறு பராமரிப்பது?

குழந்தைகளது சருமத்தை எவ்வாறு பராமரிப்பது?




‘புதிதாகப் பிறந்த எனது மகள் நான் எதிர்பார்த்ததைவிட மிகவும் சிறியவளாக இருந்தாள். அவளைத் தூக்கவே எனக்குப் பயமாக இருந்தது. அவளுடைய சருமம் மிகவும் மென்மையாகவும் சொரசொரவென்றும் வலுவற்றதாகவும் இருந்தது. அவளது சருமம் உரிந்து விடுமோ அல்லது அவள் சருமத்தை கீறி விடுவாளோ என எனக்குப் பயமாக இருந்தது!’

புதிதாகப் பிறந்த குழந்தைகள்  இலங்கையிலுள்ள குழந்தைகள் பிறக்கும் போதே சுருங்கிய சருமத்தினைக் கொண்டிருப்பதுடன் அவை வெர்னிக்ஸ் எனப்படும் மேற்புற மெழுகு போன்ற பொருளால் மூடப்பட்டு காணப்படும். . அது குழந்தை பிறந்து முதல் சில வாரங்களிலேயே தானாகவே உரிந்து விடும். vernix இயற்கை தாவரங்களிலும், களிம்புகளிலும், புரதங்களிலும்,ஆண்டிமைக்ரோபயல்களிலும் காணப்படுகின்றது. குழந்தைகளைக் கழுவுவதன் மூலம் குழந்தைகளின் சருமம் திறக்கப்பட்டு சுற்றியுள்ள நுண்ணிய உயிரினங்கள் உள்நுழைகின்றன. .  குழந்தைகளின் சருமம் உலரும்போது தாய்மார்கள் அதனைத் தடுப்பதற்காக மாய்ஸ்ட்சரைஸர்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும் புதிதாகப் பிறந்த குழந்தைகளது சருமத்திற்கு குறைந்தளவு பராமரிப்பே போதுமானது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் சருமம் மென்மையானது. இலங்கையில் காணப்படுகின்ற வெப்பமண்டல காலநிலை காரணமாக இரசாயனப் பொருட்கள், வாசனைத் தைலங்கள், உடைகளில் உள்ள சாயங்கள், சவர்க்காரங்கள் காரணமாக அவர்களது சருமங்களில் எரிச்சல், வறட்சி, தடிப்புக்கள் என்பன குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

ஒரு தாய் தனது குழந்தையின் சருமத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் சருமத்தைப் பராமரிப்பதற்கும் எதைச் செய்ய வேண்டும் அல்லது எதனைச் செய்யக் கூடாது என்பது பற்றி இங்கு விளக்கிக் கூறப்படுகின்றது.

செய்ய வேண்டியது

  • குழந்தையை தூய்மைப்படுத்துவதற்காக வாரத்திற்கு 2 – 3 தடவைகள் ச்பொஞ்ச் குளியல் செய்தல் வேண்டும். பெரும்பாலும் சிறிது வெதுவெதுப்பான நீரில் வாயையும் மலசல குழந்தையின் பின்புறத்தையும் கழுவுதல் வேண்டும்.
  • குழந்தையினது அனைத்து துணிகளையும் அவர்கள் அணிவதற்கு முன்னர் வெவ்வேறாக கழுவவும். குழந்தைகளுக்கான சவர்க்காரத்தைப் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுக்கவும். அப்போது அது குழந்தைகளின் சருமத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்காது.
  • உங்கள் குழந்தைக்கு உலர்ந்த சருமம் காணப்பட்டால் சிறிதளவு பேபி கிரீமைப் பயன்படுத்தவும். அத்தகைய உலர்ந்த சருமம் தொடர்ச்சியாகக் காணப்பட்டால் உங்களது குழந்தை மருத்துவரை நாடுங்கள்.  .
  • உங்கள் குழந்தைகளின் டயபர்களை அடிக்கடி சரிபார்த்து அவை ஈரமடைந்தவுடனேயே அவற்றை மாற்றி விடுங்கள். இது டயபர்களால் ஏற்படும் தடிப்புக்களைத் தடுக்கும்.
  • ஒவ்வொரு தரமும் டயபரை மாற்றும் போது வெறும் நீரில் குழந்தைகளது பின்புறத்தை சிறிது கழுவி விடுங்கள்.
  • அதிக வெப்பம் நிலவுகின்ற காலப்பகுதிகளில் குழந்தைகளுக்கு மென்மையானதும் இலேசானதுமான உடைகளை அணிவியுங்கள். அப்போது குழந்தைகளது உடலிலும் பின்பகுதியிலும் வியக்குறு மற்றும் சிவந்த தடிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதது

  • உங்கள் குழந்தைகளை அடிக்கடி குளிப்பாட்டுதல் கூடாது. அடிக்கடி குளிப்பாட்டும் போது அவர்களது சருமத்தினைப் பாதுகாக்கும் இயற்கை எஎண்ணெய்ப்பசை நீங்கிவிட வாய்ப்புள்ளது. குழந்தைகளது மேற்புற சருமத்தை நீக்கும் போது அது பாதிப்படைந்து அதன் காரணமாக தோல் அழற்சி போன்ற தாக்கங்கள் ஏற்படக் கூடும். http://en.wikipedia.org/wiki/Dermatitis.
  • குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் பிறப்பின் பின்னரும் விருத்தியடைந்து வளர்ந்து வருவதால் குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளுக்கென தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களைத் தவிர்த்தல் நன்று.
  • குழந்தைக்கு நாப்கின் காரணமாக சிவந்த தடிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவ்விடத்தை தேய்க்காதீர்கள்.
  • புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு வாசனையூட்டப்பட்ட, பக்டீரியா எதிர்ப்பு செய்யப்பட்ட, துர்நாற்றத்தைப் போக்கக்கூடிய சவர்க்காரங்களை பயன்படுத்துவது கூடாது.
  • வேர்க்குறு ஏற்பட்டால் அதற்காக பலதரப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவது கூடாது.

எவ்வாறிருப்பினும், இலங்கையிலுள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களைப் பயன்படுத்துவது நன்று. அதாவது மணமற்ற, கண்ணீரை வரவழைக்காத ஷாம்பூக்கள், குளிக்கும் ஜெல், மற்றும் லோசன்களைப் பயன்வடுத்துவது தாய்மாருக்கு வெகுவாகப் பரிந்துரைக்கப்படுகின்றது. எந்தவொரு பொருட்களையும் பயன்படுத்தும் போது  குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகின்றதா என எப்போதும் கவனித்துப் பார்க்கவும்.

வெப்பநிலை கூடிய காலங்களில் குழந்தைகளது சருமம் வெகுவாக உலர்ந்துவிடக்கூடிய சூழ்நிலை காணப்படுவதால் அதனை ஈரப்பதனுடன் பேண வேண்டியது இலங்கையிலுள்ள தாய்மார்களது கட்டாயக் கடமையாகும். மிகவும் அடர்த்தியுள்ள கிரீம்களும் களிம்புகளும் உங்கள் குழந்தைகளின் மென்மையான சருமத்தைப் பாதுகாப்பதற்கு உகந்த சிறந்த பொருட்களாகும். அனைத்துவிதமான குழந்தைகளுக்கான பொருட்களையும் needs.lk– http://www.needs.lk/index.php/bath/bath-tubs-accessories/hair-body-skin.html ன் ஒன்லைன் களஞ்சியத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இங்குள்ள பொருட்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக அமைவதுடன் நீங்கள் வீட்டில் இருந்தவாறே அவற்றைப் பெற்றுக் கொள்ளவும்  முடியும்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.

error: Content Protected © mummypages.lk