Home > Tamil > கிருமிகள்!

கிருமிகள்!
கிருமித் தொற்று ஏற்படாதிருக்க உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்

தனுஷனுக்கு தோட்டத்தில் விளையாட மிகுந்த ஆசை. அவன் தோட்டத்திலுள்ள மண்ணைத் தோண்டுவதும் மண்புழுக்களைப் பிடித்து விளையாடுவதுமாக இருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த அவனை அம்மா பேசுவது கேட்டது. “தனுஷன் முதலில் போய் கைகால் முகங் கழுவிவிட்டு வா” என்றாள் அவனது அம்மா. அவனுக்கு இது சகிக்க முடியாத ஒரு தொல்லையாகப் பட்டது.

அவனது அம்மா கூறியது முற்றிலும் சரியானது என நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். கைகால்களைக் கழுவுதல் எமக்கு வருகின்ற நோய்களை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.

ஆனால் சிறுவர்களுக்கு இது ஒருபோதும் விளங்குவதில்லை. அவர்கள் அதனைச் செய்வதுமில்லை. இத்தகைய கிருமிகளைப் பற்றி நாம் எவ்வாறு அவர்களுக்குக் கற்பிக்க முடியும்?

 1. அவர்களுக்குகற்றுக் கொடுங்கள்

கிருமிகள் என்றால் என்ன என்பதை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவதற்கு இந்த எளிய வழிமுறையைக் கையாளுங்கள்.

கிருமிகள் என்பது ஒரு நுண்ணிய உயிரினமாகும். அவை எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. மண், மலசலகூடங்கள், மைதானங்கள், பாடசாலை, மிருகங்கள், தாவரங்கள், மற்றும் மனிதர்களிடமும் காணப்படுகின்றன. அவை எமது கண்களுக்கு புலப்படாத சிறிய நுண்ணுயிர்களாகும்.

ஆனால்: அவை எமது உடலுக்குள் சென்று எமது மூளை, இருதயம், சுவாசப்பை, சிறுநீரகம் என்பவற்றில் நோயை உண்டாக்கும். அவ்வாறே கிருமிகள் இருமல், தடிமன், சிரங்கு, காய்ச்சல் என்பனவற்றையும் தோற்றுவிக்கும். அவை எம்மை சுகவீனமுறச் செய்வதுடன் எம்மை படுக்கையிலும் தள்ளிவிடும்.

 1. கிருமிகள் எவ்வாறு எம்மைத் தாக்குகின்றன?

கிருமிகள் எமது கண்ணுக்கு ஒருபோதும் புலப்படாது. ஆனால் கழுவாத பழங்கள், கழுவாத கைகள், விளையாட்டுப் பொருட்களில் காணப்பட்டு எமது வாய்க்குள் சென்றுவிடுகின்றன. அவை எமது உடலுக்குள் மெதுவாக ஊடுருவிவிடுகின்றன. எமக்கு நோய் தோன்றும் போதுதான் அது எமக்குத் தெரியவரும்.

 1. கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவம்

ஏன் நாம் கைகளைக் கழுவ வேண்டும் என உங்கள் குழந்தைகளுக்குக் கற்பியுங்கள். அதனை வெறுமனே வாய் வார்த்தையால் மட்டும் கூறிவிடாது அவர்கள் நாளாந்தம் கைகளைக் கழுவுகின்றார்களா எனப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்வரும் சந்தர்ப்பங்களில் அவர்கள் கைகளைக் கழுவத் தூண்டுங்கள்:

 • கைகள் அழுக்காக இருக்கும்போது.
 • உணவு உண்பதற்கு முன்னும் உணவுகளைத் தொட முன்னரும். அதாவது பழங்கள் போன்றன.
 • மலசலகூடத்தைப் பாவித்த பின்னர்.
 • தும்மிய பின்னர் அல்லது இருமிய பின்னர்.
 • செல்லப்பிராணிகளுடன் விளையாடிய பின்னர்.
 • நோயாளிகளைத் தரிசித்த பின்னர்.
 • வெளியில் விளையாடிவிட்டு வந்த பின்னர்.

கைகளை நன்றாகக் கழுவுவதன் மூலம் பக்டீரியா தொற்றுக்கள் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். கிருமி எதிர்ப்பு சக்தியுள்ள கை கழுவும் சவர்க்காரம் அல்லது ஜெல்லை சமையலைறையிலும் குளியலறையிலும் வைத்துவிடுங்கள். பிள்ளைகள் உணவருந்த முன்னர் கைகளைக் கழுவியுள்ளார்களா என பரிசோதியுங்கள். அவ்வாறு கை கழுவியிருந்தால் அவர்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்கி கை கழுவும் பழக்கத்தை ஊக்குவியுங்கள்.

 1. எவ்வாறு கைகளைக் கழுவ வேண்டும் என அவர்களுக்குக் காட்டிக் கொடுங்கள்:

எவ்வாறு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என பிள்ளைகளுக்குக் காட்டிக் கொடுங்கள். பலர் தண்ணீர் குழாயின் கீழ் வெறுமனே கைகளைப் பிடித்துக் கொண்டு இருப்பார்கள். எனவே அவர்கள் எவ்வாறு கைகளைக் கழுவ வேண்டும் என சொல்லிக் கொடுங்கள். பின்னர் நன்றாகக் கழுவுகின்றார்களா என மேற்பார்வை செய்யுங்கள்.

கிருமிகளிலிருந்து விலகி இருக்குமாறு பிள்ளைகளுக்குக் கற்பியுங்கள்.

வீதியில் செல்லும் நாய் பூனைகளை கையால் தொட வேண்டாம் என பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பழங்களை கழுவாது உண்ண வேண்டாம் எனக் கற்றுக் கொடுங்கள்.

 1. சிறந்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான சமச்சீர் உணவுகளை உண்ணுதல்

எல்லா வகையான உணவுகளையும் சம அளவில் உண்ணும் போது அது எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி அவர்கள் எல்லா உணவுகளையும் உண்ணப் பண்ணுங்கள்.

 1. கிருமிகள் எவ்வாறு பரவுகின்றது என்பதைக் காட்ட பிள்ளைகளுக்கு சில செயற்பாடுகளைச் செய்து காட்டுங்கள்.
 2. உங்கள் உள்ளங்கைகளில் சிறிது சவர்க்கார ஜெல்லை பூசுங்கள். பின்னர் அதில் சிறிதளவு நிற மையை ஊற்றுங்கள். இப்போது நிற மை எவ்வாறு கைகளில் பரவுகின்றது என குழந்தைக்குக் காட்டுங்கள்.
 1. இப்போது இரண்டு கைகளையும் தட்டுங்கள். இப்போது அந்த மை எப்படி மற்றக் கைக்கும் பரவியது என்பதை காட்டுங்கள்.

3.அவற்றை ஒரு துணியினால் துடைத்து எடுங்கள். இன்னும் எவ்வளவு மை கைகளில் படிந்துள்ளது என்பதைக் காட்டுங்கள்.

 • .கிருமிகளும் இந்த மையைப் போன்றது. அவை எவ்வளவு விரைவாக கைகளில் பரவுகின்றது என காட்டுங்கள். இவ்வாறே நாம் தொடும் போது பக்டீரியா பரவுகின்றது என குழந்தைகளுக்குக் காட்டுங்கள்.

இறுதியாக, ஆகவும் பிள்ளைகளைக் கண்டிக்காதீர்கள். பிள்ளைகள் ஓடியாடி விளையாட வேண்டும். புதிய விடயங்களைச் செய்தல் வேண்டும். அவர்களுக்கு நன்றாகக் கைகழுவும் பழக்கத்தை சொல்லிக் கொடுப்பீர்களானால் உங்களது குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.