Home > Tamil > உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் நாளாந்தச் செயற்பாடுகள்

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் நாளாந்தச் செயற்பாடுகள்

குழந்தைகள் பிறக்கும் போது அவர்களது மனம் வெறுமையாகவே காணப்படும். அது பல்வேறு நினைவுகளையும், சிந்தனைகளையும், இலக்குகளையும் பெற்றுக் கொள்ளக் காத்திருக்கும். குழந்தைகளது மூளை விருத்தியை உறுதிப்படுத்தும் விதத்தில் முறையாக அவர்களை ஊக்குவிக்கும் பொறுப்பானது பெற்றோர், பாதுகாவலர்கள், மற்றும் ஆசிரியர்களையே சாரும்.

  • முன்பள்ளி

2 வயதை அடையும் ஒரு குழந்தையானது கதைப்பதற்கும் கேள்வி கேட்பதற்கும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலை  அவதானிப்பதற்கும் ஆரம்பிக்கின்றது (0-6 வயது வரையான காலப்பகுதியானது குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் முழுமையான பங்கை வகிக்கும் ஒரு காலப் பகுதியாகும்)

அதனால்தான் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை முன்பள்ளிக்கு அனுப்புகின்றோம். அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பொருத்தமான செயற்பாடுகளின் மூலமாக அவர்களது மூளைத் திறன் விருத்தியடைய ஆர்வமூட்டி வழிகாட்டி உதவுவார்கள்.

அம்மாவினால் வீட்டில் எதனைச் செய்ய முடியும்?

பெற்றோர் அல்லது பராமரிப்பவர் என்பவர் ஒரு குழந்தையினது முதல் ஆசானாவார். உங்கள் குழந்தைகளது பல்வகைத் திறன்கள், சமூகத் திறன்கள், சுதந்திரம், பாதுகாப்பு உணர்வு என்பனவற்றை ஊக்குவித்து அதனைத் தூண்ட முயற்சி செய்யுங்கள். (பராமரிப்பவரது மேற்பார்வையின்றி தனித்து இருப்பதற்கு உள்ள நம்பிக்கை.)

நாம் எமது குழந்தைகள், பெரியவர்களைப் போலவே எல்லாத் திறன்களையும் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகின்றோம். அதனால் தான் முதல் 6 வயது வரையான காலப்பகுதியில் நாம் மூளைக்குத் தூண்டுதல் அளிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றோம்.  கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களானது ஒரு பெற்றோர் என்ற வகையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளது மூளை விருத்திக்குத் தேவையான செயற்பாடுகளில் ஈடுபட உதவும் அதேவேளை பிள்ளைகளுடன் நீங்கள் நேரத்தைச் செலவிடுவிடவும் உதவும்.

குழந்தைகளுக்கான எளிதான மூளை விருத்திச் செயற்பாடுகள்

  • நித்திரை கொள்ளும் நேரம் – நேரகாலத்துடனான, வழக்கமான தூங்கும் நேரத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள் – விசேடமாக முன்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு – ஏனெனில் அது உங்கள் குழந்தைகள் ஓய்வு எடுப்பதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும் அன்றைய நாளுக்குரிய செயற்பாடுகளைப் பற்றி அமைதியாகச் சிந்திப்பதற்கும் உதவியாக அமையும். நித்திரைக்குச் செல்லும் வேளையில் கதை கூறுவதற்கும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். கேள்விகள் கேட்டு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய கதைகளைத் தெரிவு செய்யுங்கள். முன்பள்ளி விட்டு வந்த பின்னர் சிறிது தூங்குவதற்கு இடமளியுங்கள். அப்போது அவர்கள் தூங்கி எழுந்து புத்துணர்வுடன் விளையாட அது ஏதுவாக இருக்கும்.
  • உடல் பயிற்சிக்கான நேரம் – இந்நேரத்தில் உங்கள் குழந்தையானது தனது உடல் அசைவுத் திறன்களையும் கற்றல் திறன்களையும் செயற்படுத்துவதற்கு முனையும். பந்தை எறிதல், இலகுவான நடை, உங்கள் குழந்தைகளை சைக்கிள் ஓட்டுமாறு ஊக்குவித்தல் நன்று. சைக்கிளை திசை மாற்றி ஒட்டுதல் போன்ற உடற் செயற்பாடானது அவர்களது மூளை வளர்ச்சிக்கும் மூளையின் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளுக்கும் பல்வகை திறன்களை பெறுவதற்கும் பயன்படும்.
  • கவனத்தைக் குவிக்கும் நேரம் – உங்கள் குழந்தையின் கவனத்தை ஒருங்கே சேர்ப்பதற்காக உங்கள் குழந்தைக்கு ஏதேனுமொரு விடயத்தைக் கற்பிப்பதை இது குறிக்கும். குழந்தைகள் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தரித்து இருக்க மாட்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே நாம் எமது குழந்தைகளை ஒரு நிலைக்கு கொணர்ந்து அவர்களது கவனத்தைக் குவிப்பதற்காக நேரத்தை எடுத்தக் கொள்ளுதல் வேண்டும். ஒரு அட்டையில் படங்களது சோடிகளை வரைந்து அவற்றை இணைக்குமாறு கூறுதல் வேண்டும். வர்ண அட்டைகளை எண்ணச்செய்தல். சிறிய கதைப் புத்தகங்களை வாசித்துக் காட்டி கேள்விகளைக் கேட்டல். உங்கள் குழந்தைகளின் கவனத்தைக் குவிப்பதற்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளைச் செய்யுங்கள்.
  • விளையாடும் நேரம் – இதை உங்கள் குழந்தையிடமே விட்டு விடுங்கள். – எனது செல்ல மகள் சோறு கறியாக்கி விளையாட ஆசைப்படுவாள். மரக்கறிகளை வெட்டுவாள். தண்ணீரில் தேயிலையைப் போடுவாள். இவ்வாறான செயற்பாடுகள் உங்கள் குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும். எந்தவிதமான செயர்பாடுகளாயிருந்தலும் அதில் நீங்களும் பங்கெடுத்து எந்நேரமும் அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
  • இணைக்கும் நேரம் – இயற்கை அழகைப் பற்றியும் சமூகத்தினைப் பற்றியும் உங்கள் குழந்தையின் சிந்தனைகள் விசாலமாவதற்கு உதவுங்கள். அருகிலுள்ள பூங்காக்களுக்குச் சென்று மற்ற மனிதர்களுடன் பழகும் வாய்ப்பையும் சமூகத்துடன் இணைந்து நடப்பதற்கும் பழக்குங்கள். வானம், மலை, முகில் பற்றி பேசுங்கள். செடி கொடிகள் பறவைகள், பூச்சிகள் என்பனவற்றைக் காட்டி அவர்கள் கேற்கும் விசித்திரமான கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருங்கள்.

என்னுடைய கடைசி குறிப்பு யாதெனில் எந்நேரமும் உங்கள் குழந்தைகளுக்கு அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அதனை ஒரு இடைஞ்சலாகக் கருதாது ஒரு கேள்வியை பல தடவை கேட்டாலும் சளைக்காது அதற்கு பதிலளியுங்கள்.  ஆர்வத்தை ஊக்குவியுங்கள். சோம்பேறித்தனத்தைக் கட்டுப்படுத்துங்கள். ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக டிவியைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்.

மகிழ்ச்சியாக பிள்ளைகளைப் பராமரிக்குக!

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.