Home > Tamil > உங்கள் குழந்தைக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள்

உங்கள் குழந்தைக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமைக்கான அறிகுறிகள்

பிரபு, எனது நண்பனின் மகன் மிகவும் மகிழ்ச்சியாக மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அவன் தொண்டையைச் செருமிய வண்ணம் கீழே விழுந்து உருளத் தொடங்கினான். அவனது பையிலிருந்த கச்சான் கொட்டைகள் எங்கும் சிதறின. அவனது பெற்றோர்கள் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

பிரபுவிக்கு  கச்சான் கொட்டையினால் அந்த அலர்ஜி ஏற்பட்டது.

மிகப் பிரபலமான ஆராச்சிகளில் 3 வயதிற்குக் குறைந்த குழந்தைகளில் 6% மாணவர்களுக்கு உணவில் அலர்ஜி அல்லது ஒவ்வாமை ஏற்படுகிறது.

உணவில் ஒவ்வாமை என்றால் என்ன?

உடலுக்குத் தீங்கு விளைவிக்கின்ற ஒரு பொருள் உடலுக்குள் செல்கின்ற போது உணவு ஒவ்வாமை ஏற்படுகின்றது. அது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையைப் போக்குவதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை வெளியிடப் போராட வேண்டியிருக்கிறது. http://en.wikipedia.org/wiki/Allergen இதன் விளைவாக உடல் ஹிஸ்டமின் என அழைக்கப்படும் ஒரு இரசாயனப் பொருளை  வெளியிடுகிறது – http://en.wikipedia.org/wiki/Histamine – இது ஒவ்வாமைக்கான எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது.

இலங்கையிலுள்ள குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் வரும் அறிகுறிகள்

  • நமைச்சலான தோல் – சிவந்த அரிக்கும் புடைப்புகள், முகம் சிவந்து வீங்குதல், திடீரெனத் தோன்றும் தோல் அழற்சி, – http://en.wikipedia.org/wiki/Dermatitis  அரிப்பு மற்றும் உதடுகளில், நாக்கில் அல்லது வாயில் அரிப்பு மற்றும் வீக்கம். இவை உணவு ஒவ்வாமைக்கான  பொதுவான அறிகுறிகளாகும்.
  • வீக்கங்கள் – முகம், கைகள் அல்லது கழுத்தில் கிட்டத்தட்ட உடனடி வீக்கம் ஏற்படும்.
  • வயிற்றுவலி – இது இரைப்பை பாதையில் ஏற்படுகின்ற – http://en.wikipedia.org/wiki/Human_gastrointestinal_tract, அறிகுறிகள் வலி, குமட்டல், தளர்வான மலம் ஆகியவை அடங்கும்.
  • வாந்தி – கடுமையான வாந்தி கூட உணவு ஒவ்வாமைக்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.
  • சுவாசம் – மூக்கு ஒழுகுதல், மூச்சு விடுவதில் சிக்கல், மூச்சிரைப்பு,  இருமல் மற்றும் மூச்சுத் திணறல்.
  • மயக்கமுறுதல் – சாப்பிட்ட பின்னர் தலைச்சுற்றல் மயக்கம் என்பன உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்படுகின்றது.
  • கடும் ஒவ்வாமைhttp://en.wikipedia.org/wiki/Anaphylaxis – உயிர் அச்சுறுத்தல் மிக்க இந்த ஒவ்வாமையின் போது குழந்தையின் உடலில் மேலே காட்டப்பட்டுள்ள இரண்டு அறிகுறிகளுடன் வீக்கம், மூச்சுத் திணறல் , மயக்கம் மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.

உங்கள் குழந்தை உணவு உட்கொண்ட பின்னர் இத்தகைய ஏதேனும் அறிகுறிகள் தோன்றுகின்றனவா எனப் பாருங்கள். எனினும் மேலே காட்டப்பட்ட அறிகுறிகள் எப்பொழுதும் உணவு ஒவ்வாமை காரணமாகவே ஏற்படுகின்றன என எண்ணாதீர்கள். அவை கெட்ட உணவுகளால் கூட ஏற்படலாம். எனினும் பீதி அடையாது உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.

 உணவு ஒவ்வாமயானது எவ்வாறு பிள்ளைகளின் உடலைப் பாதிக்கின்றது.

உணவு ஒவ்வாமையானது உடலின் பல்வேறு பாகங்களில் அறிகுறிகளை தோன்றச் செய்யும்.

  • சுவாசத் தொகுதி
  • இரைப்பை குடல்
  • தோல்
  • இதயத் தொகுதி

 ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். கீழே காட்டப்பட்டுள்ள உணவுகள் பெரும்பாலும் 90% ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியன.

  • பால்
  • முட்டைகள்
  • வேர்க்கடலை
  • சோயா
  • கோதுமை
  • மீன்
  • மட்டி (இறால்கள், நண்டுகள் முதலியன)
  • மரமுந்திரிகை (Cadju, hazelnuts போன்றவை – உங்கள் குழந்தைக்கு என்ன விதமான சாக்லேட் கொடுக்கின்றீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்)

மேலே காட்டப்பட்டவைகள் இலங்கையில் பெரும்பாலும் பிள்ளைகளுக்கு ஒவ்வாமை ஏற்படக் காரணமாக உள்ள உணவு வகைகளாகும். பால் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது முலைப்பால் வெல்லம் தாளாமை எனப்படுகின்றது. http://en.wikipedia.org/wiki/Lactose_intolerance’ இது எப்போதும் நிரந்தரமல்ல. இது தொடர்பாக மேலும் அறிய https://www.mummypages.lk/  பார்க்கவும்.

சில உணவுகளில் இடும் வர்ணங்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலர் பின்னர் வளர்ந்தவர்களாகும் போது இந்த ஒவ்வாமை ஏற்படும். பலர் வயது வந்ததன் பின்னர் இந்த ஒவ்வாமைக்கு உள்ளாவர்.

உங்களது குழந்தைகள் மேலே கூறப்பட்ட உணவுகளை உண்ணும்போது இத்தகைய அறிகுறிகள் ஏற்படுகின்றதா என மிகுந்த கவனத்துடன் இருங்கள். உணவில் ஒவ்வாமை ஏற்படும் போது குழந்தை எதை உண்டது என்பது தொடர்பாக அறிந்து வைத்திருங்கள். அப்போது உங்கள் குழந்தையின் பராமரிப்பு நிலையம் அல்லது முன்பள்ளி ஆசிரியருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தி நீங்கள் கொடுக்கும் உணவைத் தவிர வேறு எதையும் உண்ண அனுமதிக்காது விடலாம்.

எப்போதும் பதட்டம் அடையாது உங்கள் குழந்தை எதை உண்டது என்பது தொடர்பில் கவனமாக இருங்கள். தேவையற்ற வரையறைகள் மற்றும் அச்ச உணர்வுகளைத் தவிர்த்து விடுங்கள்.  http://en.wikipedia.org/wiki/Paranoia ஆனால் உணவு ஒவ்வாமை தொடர்பில் மிகுந்த விழிப்புடன் செயற்படுங்கள்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.