Home > Tamil > உங்கள் குழந்தைகள் இணையத் தளத்தைப் பயன்படுத்தத் தயாரா?

உங்கள் குழந்தைகள் இணையத் தளத்தைப் பயன்படுத்தத் தயாரா?

இணையத் தளமானது உலகம் தொடர்பான பல தகவல்களை அறிந்து கொள்வதற்கான ஒரு சிறந்த வாயிலாகும். ஆனாலும் அதை சரியான முறையில் கையாளாவிட்டால் அது மன வேதனைக்குக் காரணமாக அமைந்து விடுவதுடன் குழந்தைகள் உடல் ரீதியானதும் உள ரீதியானதுமான தாக்கங்களுக்கு ஆளாகக் காரணமாக அமையும்.

இலங்கையில் தற்காலத்தில் இணையத்தளம் காரணமாகவும் பல சமூக வலைத்தளங்கள் காரணமாகவும் பலர் தற்கொலை செய்து கொள்ளும் பல கொடூர நிகழ்வுகளை நாம் பார்க்கின்றோம். அவை அனைத்தும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை அடிப்படையாகக் கொண்டே காணப்படுகின்றன. முகப் புத்தகம் வாயிலாக முன்பின் அறியாதவர்களுடன் தொடர்புகள் ஏற்படுகின்றன.

  • இது உண்மையிலேயே இணையத் தளங்களின் தவறா? அல்ல. மாறாக இது பெற்றோர்களின் தவறாகும். காரணம், அவர்கள் தங்களின் பிள்ளைகளை இணையத் தளத்தைக் கையாள்வதற்கு முறையாகத் தயார்படுத்தாமையே ஆகும்.
  • பிள்ளைகள் சமூகத்திலுள்ள பல்வேறு நவீன வசதிகளைப் பயன்படுத்தும்போது தங்கள் பொறுப்புகள் யாது என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். இந்த யுகமானது இணையத்தளம், ஐ போன், லேப்டாப், இணையத்தள கபே, டாப் எனப் பலவற்றை உடனடியாகப் பெற்றுக் கொள்ளும் காலமாகும். உங்கள் பிள்ளையின் வளமான பிள்ளைப் பருவத்திற்காகவும் அவர்கள் வளர்ந்து இந்த நவீன சமூகத்தோடு ஒட்டி வாழ்வதற்காகவும் அவர்களுக்கு சரியான சமூக வழிகாட்டுதல்கள் வழங்கப்படவேண்டியது அவசியமாகும்.

இலங்கையிலுள்ள பிள்ளைகளை இணையத் தளத்திற்கு பழக்கப்படுத்துதல்.

பெரும்பாலான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை விட இணையத் தளங்களிலேயே அதிக நேரம் செலவிடுவதில் ஆர்வமாகவிருக்கிராகள். இதை காட்டாயம் மாற்றுங்கள். பெற்றோர்கள் கட்டாயம் பிள்ளைகளுடன் அமர்ந்து இணையத் தளங்களைக் காட்டி, கேள்விகளைக் கேட்டு இணையத் தளங்கள் பற்றியதான விடயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நீங்களும் இவற்றைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இணையத்தளப் பாதுகாப்புக் கருவிகள் பற்றி அறிந்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும். http://en.wikipedia.org/wiki/Parental_controls போன்ற கருவிகள் மூலம் பிள்ளைகள் இணையத் தளங்களில் வேண்டாதவற்றைப் பர்வையிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.

வயதிற்கேற்ப பார்க்கக்கூடிய இணையத் தளங்கள்.

  • 2-3 வயது – உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து நீங்கள் சிறுவர் கதைகள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி, விளையாட்டுக்கள் போன்றவற்றைப் பார்வையிடலாம்.
  • 4-7 வயது – பிள்ளைகளுடன் கட்டாயமாக அமர்ந்திருந்து பொருத்தமான இணையத் தளங்களைப் பார்வையிடச் செய்வதுடன் பொருத்தமான இணையத் தளங்களைக் கண்டறிவதற்கும் சொல்லிக் கொடுத்தல் வேண்டும். மின்னஞ்சல் முகவரிகளை அறிமுகம் செய்தல், மின்னஞ்சல் மூலமாக எவ்வாறு தொடர்புகளை மேற்கொள்ளலாம், தரவுகளை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம், அவற்றை எவ்வாறு பிரதி எடுக்கலாம் போன்ற விடயங்களை சொல்லிக் கொடுப்பதுடன் அரட்டைப் பக்கங்களால் வரக்கூடிய தீமை பற்றியும் எடுத்துக் கூற வேண்டும்.
  • 8-11 வயது – இந்த வயதினர் இணையத் தளங்களைப் பயன்படுத்தும் போது கட்டாயமாக நீங்கள் கட்டளைகளை விதித்தல் வேண்டும். அவர்கள் அவற்றை மீறினால் பெற்றோர் நீங்கள் உங்களது கட்டுப்பாடுகளை விதிக்க பின் நிற்காதீர்கள். அத்தோடு பிள்ளைகள் இதுவரை என்ன வகையான தளங்களைப் பார்வையிட்டார்கள் என பரிசோதித்துத் தெரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் எந்த விதமான அசாதாரண நடத்தைகள் காணப்பட்டாலும், அறிமுகமில்லாத புதிய நபர்கள் அவர்களது இணையத் தளங்களில் வந்தாலும், அல்லது ஏனைய தளங்களில் காணப்பட்டாலும் வேறு ஏதேனும் ‘சட் கிளப்’களில் இணைவதற்கு புதிய அழைப்புகள் வந்தாலும், அது பற்றி பிள்ளைகளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இவ்விடயங்களில் பிள்ளைகள் ஆர்வமாக இருப்பதுடன் இரகசியமும் பேணுவார்கள். என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள். கணணிகளை வீட்டில் பொதுவான இடத்தில் வையுங்கள். குழந்தைகளின் அறையில் தனியாக வைக்க வேண்டாம்.
  • 12-14 வயது – விதிமுறைகள் கட்டாயம் அவசியம். உங்கள் பிள்ளைகள் அவர்களது உண்மையான பெயரிலோ அல்லது தங்களது வயதை வெளிப்படுத்தும் விதமாகவோ மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்ய விடாதீர்கள் (உதா: santhi2004). இணையத் தள மோசடிகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ‘சட் ரூமி’னால் வருகின்ற பாதகங்கள் தொடர்பில் அவர்களை விழிப்படையச் செய்யுங்கள். (face book, Twitter). உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் கவனமாக இருங்கள்.
  • 15-18 வயது: குறிப்பிட்ட சில தகவல்களை இணையத் தளத்தில் தேட வைத்து ஊக்குவியுங்கள். (சுற்றுலாத் தளங்கள் தொடர்பான ஆய்வு) பொருட்களை வாங்கும் போது உங்கள் குழந்தைகளிடம் விசாரித்து அவற்றை இணையத்தில் தேடுவதற்கு உங்கள் பிள்ளைகளின் உதவியை நாடுங்கள். இணையத்தில் காணப்படுகின்ற சாதகமான விடயங்களையும், பரந்தளவான அறிவைப் பெற்றுக் கொள்ளும் விதத்தையும் கூறுங்கள். அதிலுள்ள அபாயங்கள் மட்டில் அவர்களை அறிவுறுத்துவதுடன் நாளாந்தம் அவர்களது நடவடிக்கைகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.

உங்கள் பிள்ளைகள் இணையத்தளம் தொடர்பாக அறிந்து கொள்வதைத் தடுக்காதீர்கள். ஆனால் அதனை முறையாகப் பயன்படுத்துவதற்குக்  கற்பிப்பதுடன் சில வரையறைகளையும் விதித்து நாளாந்தம் அவதானியுங்கள்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.