Home > Tamil > உங்களது பிள்ளையின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

உங்களது பிள்ளையின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
  1. நீங்கள் புரிந்துகொண்டதனை உங்கள் பிள்ளை உணர்வதற்கு உதவுதல்

 எனது மகள் கடையொன்றி்ல் பொருள் ஏதாவதை வாங்கித்தரும்படி கேட்டு நான் இல்லை என்று மறுப்பின், அவள் தந்திரமாக “அம்மா நான் சொல்வதைக் கேளுங்கள்“ என்பாள். எதற்காக அப்பொருளைக் கேட்கிறாள் என்று அவள் சொல்வதற்கு இடமளித்து பின்னர் எதற்காக அதனை வாங்கித்தர முடியவில்லை என்பதனை மெதுவாக விளக்கும்போது அவள் மகிழ்ச்சியடைவாள். ஏனெனில் அம்மா தன்னைப் புரிந்துகொண்டதனை அவள் உணர்கிறாள்.

  1. தீர்ப்பு வழங்குதல் அல்ல ஏற்றுக்கொள்ளல்

நண்பன் ஒருவன் தன்னிடம் பேசுவதில்லையென எனது மகன் என்னிடம் கூறியபோது ”உனது நண்பனை அவனது போக்கில் விட்டுவிடு, அவனைவிடவும் நீ சிறந்தவன்” என்று கூற நினைத்தேன் ஆனால் அதற்குப் பதிலாக அவன் கூறுவதைக் கேட்டு மோதலுக்கான காரணத்தை அவன் விளக்குவதற்கு இடமளித்தேன். நான் அவனுக்காக அனுதாபப்பட்டதுடன் அவர்களது நட்பு மீண்டும் தொடர்வதற்கான தீர்வு ஒன்றினைத் தேடவும் முயற்சித்தேன். ஒரு வாரத்தின் பின்னர், ஆரித்தும் நானும் மீண்டும் நண்பர்களாகிவிட்டோமென எனது மகன் என்னிடம் மகிழ்ச்சியுடன் கூறினான். அவன் தன்னுடைய தனிப்பட்ட அனுபவத்தினை என்னுடன் கலந்துரையாடியது பற்றி நான் மகிழ்வுற்றதுடன் நான் தீர்ப்பேதும் வழங்கவில்லையெனவும் மகிழ்ச்சியடைந்தேன். உங்களது பிள்ளை தனது அபிப்பிராயத்தினைத் தெரிவிக்க இடமளியுங்கள் அது மிகச் சிறியதாயினும்  பொருட்டல்ல. எப்போதும் தீர்ப்பளிக்கின்ற, அத்துடன் பாதுகாப்பளிக்கின்ற பெற்றோராக நீங்கள் இருக்கவேண்டாம்.

  1. உங்களது பிள்ளையின் துன்பங்களை ஏற்றுக்கொள்க

பிள்ளையொன்று பரீட்சைக்குப் படிக்கையில், ”நீ 90 மதிப்பெண்கள் பெறவேண்டும். சரியா”! என நிர்ப்பந்திக்கக்கூடாது. அதற்குப்பதிலாக, பிள்ளை அப்போது படித்துக்கொண்டிருப்பது கடினமானதா? சொற்களை ஞாபகத்தில் வைத்திருக்க முடிகிறதா? நான் எவ்வாறு உதவலாம்? என்று பிள்ளையிடம் வெளிப்படையாகக் கேட்கலாம்.  எந்தச் சந்தர்ப்பமாயினும் பிள்ளை தனது துன்பத்தினை வெளிப்படுத்துவதற்கு இடமளிக்கவும். தாயிடம் அல்லது தந்தையிடம் தங்களது பிரச்சினையைக் கொண்டுவருவதற்கும் அத்துடன் அவர்களுக்குக் கடினமாக உள்ளதனை ஒப்பக்கொள்ளவும் அவர்களுக்குக் கற்பிக்கவும்.

  1. உங்களது பிள்ளையின் முக்கியத்துவத்தினை ஏற்றுக்கொள்க

பிரச்சினை எந்தளவு சிறிதாயிருப்பினும்கூட பிள்ளையின் வாயினை அடைக்கவேண்டாம். ”ஏனெனில் நான் அப்படிச் சொல்கிறேன்…..உனது விளக்கம் எனக்குத் தேவையில்லை..” என்பவை  பிள்ளையின் வாயினை அடைத்து அவர்கள் அபிப்பிராயங்கள் முக்கியமல்ல என்பதனை அவர்களுக்குக் கூறும் சொற்பதங்கள் ஆகின்றன. உங்கள் கோபத்தினைக் கட்டுப்படுத்துக, பிள்ளை தனது நிலையினை விளக்க அல்லது பிள்ளை தானே சில விடயங்களில் தீர்மானப்பதற்கு இடமளியுங்கள். தேவையானளவுக்கு ஊக்கம் அளிக்கும்போது மிகச் சிறிய பிள்ளைகூட வியக்கத்தக்க வகையி்ல் விவேகமான அநேக தீர்மானங்களை எடுக்கவல்லன.

முடிவாக, உங்களது பிள்ளையை தனியொருவராகக் காண்பது மிகவும் முக்கியமானது என்பதனைக் கூறிக்கொள்கிறேன். பிள்ளையினது உணர்வுகளிற் கவனஞ் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.