Home > Tamil > ஆரோக்கியமான காலை உணவுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்!

ஆரோக்கியமான காலை உணவுடன் உங்கள் நாளை ஆரம்பியுங்கள்!
“பிள்ளைகளே இன்று எத்தனை பேர் காலை உணவை அருந்தியிருகிறீர்கள்?” பிரியா தன்னுடைய வகுப்பிலுள்ள மாணவர்களை வினவினாள். என்ன ஆச்சரியம்? ஒருசில பிள்ளைகள் மட்டுமே கையை உயர்த்தினர்.

காலை எழுந்து ஒரு சில மணித்தியாலங்களுக்குள் உணவு அருந்துதல் உடல் நலத்திற்கு நல்லது என நாம் பலரும் அறிந்துள்ளோம். ஆனால் எம்மில் எத்தனை பேர் காலை உணவை உண்பதை ஒரு பழக்கமாகக் கொண்டுள்ளோம்.

இலங்கையிலுள்ள பல குடும்பங்கள் அதிகாலையில் உள்ள வேலைப்பளு காரணமாக காலை உணவை உண்பதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் காலை உணவைத் தவிர்த்தல் என்பது உடலுக்கு நல்லதல்ல. ஏனென்றால் காலைக் கடமைகளைச் செய்வதற்கு எமக்கு அதிகளவான சக்தி தேவைப்படுகின்றது. ஆகவே தான் நாள் முழுவதும் உங்கள் உழைப்பிற்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கு காலை உணவு அத்தியாவசியமாகின்றது.

காலை உணவு ஏன் அத்தியாவசியமாகின்றது என்பதற்கான சிறந்த காரணங்கள் சில இங்கே காட்டப்படுகின்றன.

  • இழந்த சக்தியை மீள்நிரப்புதல் – நீண்ட நேர ஓய்விற்கு பின்னர் அதாவது இரவு உணவு உண்டு நீண்ட நேரத்திற்குப் பின்னர் நீங்கள் உண்ணும் முதல் உணவு காலை உணவாகும். அது அன்றைய நாளையும் வேலையையும் தொடங்குவதற்கான சக்தியைக் கொடுக்கின்றது. அத்தோடு மட்டுமல்லாது உங்கள் நாளாந்த கடமைகளை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் செய்வதற்கான சக்தியை அது அளிக்கின்றது.
  • உங்கள் போசாக்கு மட்டத்தை அதிகரிக்கின்றது– உங்கள் காலை உணவில் அதிகளவான போசாக்கு உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதாவது கார்போஹைதரேற்று, புரதம், கல்சியம், கனியுப்புக்கள், நார்ச்சத்துக்கள் என்பவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சோறு, பயறு, கடலை என்பன இலங்கையர் உண்ணும் சிறந்த காலை உணவுகளாகும். அத்தோடு பால், தேநீர், பழச்சாறுகள், இலைக் கஞ்சிகள் என்பனவற்றையும் உங்கள் காலை உணவாக சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஆரோக்கியமான உணவுகளைத் தெரிவு செய்யுங்கள்-காலை உணவை உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுவது சிறந்தது. எனினும் தற்கால அவசர சூழ்நிலையில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து காலை உணவை உண்பதென்பது இயலாத காரியம். சில வேளைகளில் காலை உணவை வீட்டில் உண்பது கூட முடியாத காரியமாக இருக்கலாம். அப்போது நீங்கள் செல்லும் வழியிலேயே உணவை அருந்த முயற்சி எடுங்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதை விட்டுவிட்டு எண்ணெய் நிரம்பிய பாஸ்ட் பூட்களை உண்ணாதீர்கள். ஏனெனில் சண்ட்விச், சீஸ், யோகர்ட் போன்ற கடைகளில் ஏராளமாகக் கிடைக்கக் கூடிய உணவுகள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியன.
  • ஆரோக்கியமான உடற் பருமனைப் பேணுங்கள்– காலை உணவை உண்ணுபவர்களை விட காலை உணவை உண்ணாதவர்கள் அதிக உடல் எடையுடன் காணப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் காலை உணவுக்குப் பதிலாக கடையில் கிடைக்கும் பாஸ்ட் பூட்களை உண்ணுகிறார்கள். இத்தகைய உணவுகளில் அதிகளவு கொழுப்பும் சீனியும் காணப்படுவதுடன் குறைந்தளவான போசாக்கினையே கொண்டுள்ளது.
  • கல்வியில் சிறந்த முன்னேற்றம் காணப்படும்– காலை உணவை உட்கொள்ளாது பள்ளிக்கு ஓடும் பிள்ளைகளை விடகாலை உணவை உட்கொள்ளும் பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவதாகவும் சிறந்த கிரகித்தல் திறன் உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
  • நிலையான சக்தி– வளரும் பிள்ளைகளுக்கு அதிகளவான போசாக்கும் சக்தியும் தேவைப்படுகின்றது. காலை உணவை உட்கொள்ளும் போது உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது. இதன் காரணமாக பிள்ளைகள் விளையாட்டுக்களிலும் ஏனைய உடற் பயிற்சி செயற்பாடுகளிலும் சிறந்து விளங்குவதற்கு காலை உணவு உறுதுணையாக அமைகின்து.
  • சிறந்த உளநலம் ஏற்படுதல்– சமச்சீரான காலை உணவானது உங்கள் உலநிளையை சீராக வைத்துக் கொள்வதுடன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கின்றது.
  • ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்– நாளாந்தம் தொடர்ச்சியாக சிறந்த காலை உணவுகளை உட்கொண்டு வந்தால் வயிற்றுப்புண், நீரிழிவு நோய், இருதய நோய்கள், உயர் குருதி அமுக்கம் என்பன ஏற்படாதென ஆய்வுகள் கூறுகின்றன.

சில வேளைகளில் உங்கள் குழந்தைகளை காலை உணவை உட்கொள்ள வைப்பது மிகுந்த சிரமமான காரியமாக இருக்கலாம். அவர்களை உண்ண வைக்க வேண்டுமென்றால் உங்கள் காலை உணவுகளை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரியாகவும் போசாக்கு மிக்கதாகவும் தயாரித்தல் வேண்டும். இலங்கையில் பல சிறந்த காலைவேளையில் உண்ணக்கூடிய உணவுகள் காணப்படுகின்றன. எனவே காலை உணவை உட்கொள்ளுதல் என்பது ஒரு சிறந்த நற்பழக்கமாகும்.

உணவு செய்முறை காணொளிகளைக்கான கீழ்காணும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்
https://goo.gl/3xYgJc

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.

You may also like
සිඟිත්තාට කෑම වට්ටෝරු අලිගැට පේර ස්මූතීස්
ඔබේ දරුවාට සැබෑ සමතුලිත ආහාරයක් දෙන්න
පෝෂ්යදදායක උදෑසන ආහාරයක් ගෙන ඔබේ දවස පටන් ගන්න!
අධි බර කොටසට අයත් දරුවෙකුගේ ආහාර පාලනය කළ යුත්තේ කෙසේද ?