Home > Tamil > அந்நியரால் வரும் ஆபத்து: உங்கள் குழந்தைகள் இது பற்றி அறிவார்களா?

அந்நியரால் வரும் ஆபத்து: உங்கள் குழந்தைகள் இது பற்றி அறிவார்களா?
“மகன் நீங்கள் யார் அந்த வெளியாளோடு கதைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்” வெளியே எட்டிப் பார்த்த அமுதா மிகுந்த பயத்துடன் கேட்டாள்.

“நல்ல அங்கிள். அவர் எனக்கு டொபி தந்து விட்டு சென்றார்”

அதிர்ச்சியடைந்த அமுதா உடனே ஓடி வந்து கையிலிருந்த டொபியை வாங்கினாள். குழந்தை இன்னமும் அந்த டொபியை சாப்பிட்டிருக்கவில்லை. “முன்பின் அறியாதவர்களிடமிருந்து எந்த உணவுப் பொருட்களையும் வாங்கக் கூடாது என நான் ஏன் எனது குழந்தைக்கு இதுவரை சொல்லவில்லை” என தன்னைத் தானே கடிந்து கொண்டாள் அமுதா.

குழந்தைகள் இயல்பாகவே மற்றவர்களை நம்பிவிடக் கூடிய அப்பாவிகள். துரதிஷ்டவசமாக, இது பயப்பட வேண்டிய ஒரு விஷயம். யாதெனில் பெரும்பாலான வயதுவந்தோர் இத்தகைய அப்பாவிக் குழந்தைகளை பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தி நாசம் செய்கிறார்கள். குறிப்பாக முன்பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பின்னரும், தானாகவே அவர்கள் பேசவும் நடக்கவும் தொடங்கிய பின்னரும், பாதுகாப்பான வீட்டுச் சூழலிலிருந்து வெளியில் வாழத் தொடங்குகின்ற சந்தர்ப்பங்களிலும், இலங்கையிலுள்ள பல தாய்மார்கள் தங்களது அதிக வேலைப் பளு காரணமாக பிள்ளைகளிடம் எந்நேரமும் ஒரு கண்ணை வைத்திருக்க முடியாதுள்ளது. அதற்காக முகம் தெரியாத அந்நிய நபரை விட்டு ஓடிப்போய்விட வேண்டும் எனக் கூறி உங்கள் குழந்தைகளைப் பயமுறுத்தாதீர்கள். ஆனால் அந்நியர்களைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துதல் கட்டாயமானதாகும்.

அன்பான அம்மாக்களே, உங்கள் பிள்ளைகள் உங்களது தொடர்ச்சியான கண்காணிப்பின்றி பேசவும் வெளியில் போய்வரக்கூடியதுமான அளவுக்கு வளர்ந்த பின்னர் அந்நியரால் வரக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய பின்வரும் அடிப்படை விதிகளை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுவது சிறந்த தருணமாகும்.

  • உங்கள் குழந்தை உங்களுடைய துணையின்றி இதுவரை சந்தித்திராத எந்தவொரு நபரும் அன்னியராவார்.
  • குடும்ப உறுப்பினர்களைத் தவிர எந்தவொரு அந்நிய நபரிடமிருந்தும் உணவையோ பாணங்களையோ பெற்றுக் கொள்ளக் கூடாது.
  • உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் எந்தவொரு அந்நிய நபருடைய வாகனங்களில் அனுப்புதல் கூடாது.
  • உங்கள் குழந்தைகளுடன் இரகசிய வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது ஏதேனும் ஒரு அவசரமான நேரத்தில் நீங்கள் உங்கள் பிள்ளையைக் பாடசாலையிலிருந்து கூட்டிவர எவரையேனும் அனுப்பும் சந்தர்ப்பத்தில் அந்நபர் அந்த வார்த்தையைக் கூறினால் அவருடன் வீட்டுக்குப் போக சம்மதிக்கலாம் என உங்கள் குழந்தையிடம் கூறி வையுங்கள்.
  • நீங்கள் பொது இடங்களில் இருக்கும் போது உங்கள் குழந்தைகளை உங்கள் அருகிலேயே கூப்பிடு தூரத்தில் இருக்குமாறு கூறுங்கள். அவர்கள் தனித்து விடப்பட்டால் தொலைந்து போகும் சாத்தியம் அல்லது பாதிப்படையும் சாத்தியம் உண்டு.
  • பிள்ளைகளது பிறப்புறுப்புப் பகுதியை அன்னியர் தொடுவது முறையல்ல என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். அவ்வாறே உங்கள் குழந்தையை அன்னியர் ஒருவர் அவரைத் தொடுமாறு வற்புறுத்துவதும் முறையல்ல எனக் கூறவும்.
  • ஒரு அன்னியர் உங்கள் குழந்தையை ஏதாவது செய்ய முயலும் போது அது அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ‘தள்ளிப் போ’ எனக் கூச்சலிடுமாறும் அல்லது மக்கள் அதிகமுள்ள பாதுகாப்பான இடத்துக்கு விரைவாக ஓடிப் போகுமாறும் அறிவுரை கூறவும்.
  • உங்கள் பிள்ளைகள் உங்கள் வீட்டு முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் ஞாபகம் வைத்திருக்கப் பண்ணுங்கள். உங்கள் குழந்தை மிகச் சிரியவரெனின் அவரது சட்டைக்குள் உங்கள் பெயர் மற்றும் அவசர தொலைபேசி இலக்கத்தை ஒரு துண்டில் எழுதி கழுத்தில் மாட்டி விடவும்.
  • பாதுகாப்பான அந்நியர்களை முன்பே அறிந்து வைத்திருத்தல்: அவசர நிலைமைகளின் போது சீருடை அணிந்த நபர்களிடம் (போலிஸ் உத்தியோகத்தர்) அல்லது எவரேனும் பிள்ளைகளுடன் இருப்பவரிடம் (இன்னொரு பெற்றோர்) உதவி கேட்க வேண்டும் என உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுங்கள்.
  • உங்கள் பிள்ளைகள் இண்டர்நேட்டிலோ அல்லது ஆன்லைனிலோ அந்நியருடன் கதைப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிள்ளைகள் விரைவிலேயே மறந்து விடக் கூடிய சுபாவம் உள்ளவர்கள். எனவே அடிக்கடி இந்த விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஞாபகமூட்டுங்கள். நாம் முழு நிறைவான ஒரு உலகில் அல்ல வாழ்கின்றோம். பிள்ளைகளுக்கு  முன்கூட்டியே அந்நியர்கள் பற்றி அறிவுறுத்தி வைத்திருத்தல் இலங்கையிலுள்ள தாய்மாருக்கு தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.

மருத்துவ நிபந்தனைகள்:

mummypages.lk ஒரு மருத்துவ நிபுணரோ, ஒரு மருத்துவரோ அல்லது ஒரு MD யோ அல்ல. இந்த இணையத் தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் ஒரு பொதுவான மருத்துவ ஆலோசனைகளேயன்றி அதனை ஒரு நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ ஆலோசனைகளுக்கான ஒரு மாற்றீடாகக் கருதக் கூடாது. இவ்விணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு மருத்துவ அல்லது ஆரோக்கிய நிலைமைகளுக்கான ஒரு சிகிச்சையாகவோ அல்லது நோய்களைக் கண்டறியுமொரு வழிமுறையாகவோ கருதக் கூடாது. உங்களுக்கு ஒரு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால் உடனடியாக நீங்கள் உங்கள் மருத்துவரை நாடுதல் வேண்டும் .

Important!
mummypages.lk is not a doctor or a specialist and this site gives only general information’s, there for if you feel any sort of discomfort or illness please consult your doctor immediately for assistance.